பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 21241

‘பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு’                             - முருகு 2

‘பொருளிலார்க்கு, இவ்வுலகு இல்லாகி யாங்கு’                        - கு. 247

"அறிதோ றறியாமை கண்டற்றால்’                                  - கு. 1110

எனவும் இங்ஙனம் பெரும்பாலும் வரப்பட்ட மூவகை வினைக்கும் (முற்று, பெயரெச்சம், வினையெச்சம்) தமக்கு ஏற்றபடி பொருள் விளங்குதற்கேற்ற சொல்லெல்லாம் விரித்து எழுதிச் சொற்குணம் வாளா போயினர்.

‘வெகுளி, கணமேயுங் காத்த வரிது’                                  - கு. 29

‘புறங்குன்றி கண்டனைய ரேனும்’                                   - கு. 227

இவற்றிற்கு ஆனாலும் - ஆயினும் எனப் பொருள் எழுதி வாளா போயினர். [கணமேயும் - கணமேயானாலும், பரி.]

நச்சினார்க்கினியர் நன்னூலார் முதலாயினார் இயற்கை முதனிலை ஆ, போ என்றே இருக்கும் என்றார். தொ. சொ. 230 நச். ந. 237.

திருவள்ளுவர், பரிமேலழகர் முதலாயினார் இயற்கை முதல்நிலை, ஆகு, போகு என்றே இருக்கும் என்றார். - குறள் 371. பரி.

கல் - வில் - நில் எனவும்,

ஒல் - கொல் - செல் - சொல் - புல் - வெல் எனவும்.

குற்றொற்று முதல்நிலைத் தனிவினைகள் விகற்பமின்றி ஒரு படித்தாய் இருக்கவே. இவற்றுள் வியங்கோள் விகுதி பொருந்தில், கற்க - விற்க - நிற்க எனவும், ஒல்க - கொல்க - செல்க - சொல்க - புல்க - வெல்க எனவும் விகற்பித்துப் பலபடித்தாயின. இது மட்டோ?

இம் முதல்நிலைகள் செய என் எச்சமாயின், கற்க என்னும் வியங்கோள் தானே எச்சமாகியும், அவ்வாறன்றி வேறுபட்டு, ஒல்ல - கொல்ல - செல்ல என எச்சமாகியும் வந்தன.