பக்கம் எண் :

 நூலமைப்பு : ஒழிபியல்25

ஆற்றொழுக்கும் அடிமறிமாற்றம் அல்லாத அடிமொழி மாற்று - கண்ணமொழி மாற்று - நிரல்நிறை - விற்பூட்டு - தாப்பிசை அளைமறிபாப்பு - கொண்டுகூட்டு என்ற எழுவகைப் பொருள்கோள் பற்றிய தொடர்கள், மரூஉமொழி - பொய்யுரை - சில இடைப்பிறவரல் - பண்பு - அதிகாரம் - அவாய்நிலை முதலியன, விகுதி உருபு உம்மை மாறி வருதல் முதலியன பொருத்தமில் புணர்ச்சியாம்.

சில இடைப்பிறவரல்கள் ஒருகால் பொருத்தப் புணர்ச்சியாகவும், ஒருகால் பொருத்தமில் புணர்ச்சியாகவும் வரும்.

எழுத்து விகாரம், புணர்ச்சி விகாரம் - புணர்ச்சியில் விகாரம் என்ற இருபிரிவினது ஆகும்.

புணர்ச்சி விகாரம் எழுத்திலக்கணத்தில் எழுந்த விகாரம், யாப்பிலக்கணத்தில் எழுந்த விகாரம் என்ற இரு பகுப்பினை உடையது.

புணர்ச்சியில் விகாரம் தோன்றல் - திரிதல் - கெடுதல் - நிலை மாறுதல் என்ற நான்கு வகைகளை உடையது.

இந்நான்கு விகாரங்களும் எழுத்தளவில் அமையாது சொற் றொடர்களில் அமைந்துள்ள சொற்களிடையேயும் காணப்படும்.

இவ் விகாரங்கள் பொருள் வேறுபடுதலும் உண்டு; பொருள் வேறுபடாமையும் உண்டு.

காரணத்தையே இடுகுறியாகவும், இடுகுறியையே காரணமாகவும், பல சொற்களையே ஒரு சொல்லாகவும், ஒரு சொல்லையே பல சொற்களாகவும் சான்றோர் கருதும் நிலையும் தமிழ் மொழிக்கண் உள்ளது.

பகுபதத்துப் பல நிலைகளும் விளக்கப்பட்டுள்ளன. ஒரு மொழி ஈற்றினும், தொடர்மொழி ஈற்றினும், பின்மொழி கெட்ட முன்மொழி ஈற்றினும், முன்மொழி கெட்ட பின்மொழி யீற்றினும் வரக்கூடிய பல வகைப்பட்ட விகுதிகளுள் பொருத்தமான