| ஒழிபியல் - நூற்பா எண். 11 | 267 |
10. செய்தான் மாடம் - மாடத்தை - கடைத்தொக்கது. இருந்தான் குன்றம் - குன்றத்துக்கண் - கடைத்தொக்கது அன்பு அருள் இருக்கும் அறவோரிடத்தே - அன்பும் அருளும் இருக்கும் எனச் சொல்லின் கடையிலும், தொடரின் இடையிலும் தொக்கது. [வி-ரை: சொல்லின் கடைக்கு அருளும் என்பதனையும், தொடரின் இடைக்கு அன்பும் என்பதனையும் கொள்க.] ‘ஆதி’ என்றதனால், வடுகங்கண்ணன் - வடுகனுக்கு மகனாகிய கண்ணன் கவிழ்தும்பை - கவிழ்ந்த பூவை உடைய தும்பை. ஆந்தை, பூந்தை - ஆதனுக்குத் தந்தை, பூதனுக்குத் தந்தை - இவை முதலிய பெரும்பாலும் விரியும். தனித்தனி சிறப்பித்தால் விரிதல் நோக்கி, ‘அறுவகைத் தொகையும்’ எனப் பொதுபடக் கூறிச் சுருக்கினம் என்க. [வி-ரை: வடுகக்கண்ணன், வடுகங்கண்ணன் என்பனவற்றிற்கு விதி, ‘வல்லொற்று வரினே இடத்தொகை யாகும் மெல்லொற்ற வரினே பெயர்த்தொகை யாகும்’ - ந. 371 என்பது. ஆந்தை, பூந்தை என்பனவற்றிற்கு விதி. ‘இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் முதற்கண் மெய் ஒழித்து அகரம் நிலையும் மெய் ஒழித்து அன்கெடும் அவ்வியற் பெயரே’ - தொ. எ. 347 ‘ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு பெயரொற்று அகரம் துவரக் கெடுமே ’ - தொ. எ. 348 என்பன. |