பண்புத் தொகை 98 | பண்புத் தொகைவிதி பகரின் பெருகும் ஆயினும் சிலவிதி அறைகுவன் கேள்நீ பண்புமுன் வருதலும்1இருபண்பு அடுத்தலும்2 இருபண்பொடு பொருள் இயைதலும்3அவ்விரு பண்புகள் தாமே பொருளை விளைத்தலும்4 இயற்பெயர் சிறப்புப் பெயர்மா றுதலும்5 சிறப்புப் பொதுப்பெயர் முறையே சிறத்தலும்6 பொதுச்சிறப் புப்பெயர் முறையே பொருந்தலும்7 பின்மொழி ஆகு பெயராய்ப் பிறத்தலும்8 முன்மொழி ஆகு பெயராய் முடிதலும்9 இருமொழி ஆகு பெயராய் இருத்தலும்10 ஒருபொருட்கு இருபெயர் ஆகி ஒட்டலும்11 முற்பதம் தமிழ்மொழி12 முற்பதம் வடமொழி13 இருபதம் தமிழ்மொழி14 இருபதம் வடமொழி15 ஆகி வருதலும் ஆதியாப் பலவே.
| |
வெண்கரும்பு என இனம் பற்றியும், வெண்திங்கள் என இனம் பற்றாமலும், வெண்டாமரை எனத் தனக்குரிய சினையை விட்டு உரிமையில்லாத முதலைப் பற்றியும், (வெண்பூத் தாமரை) வெள்ளாடு என எதிர்வு பற்றியும், (எதிர்காலத்து வேள்விக்கு உதவலின்) ‘விலங்கன்னார் வெள்ளறிவி னார்’ என இழிவு பற்றியும், ‘வெண்களமர் வெள்ளாளர் எனச் சாதி பற்றியும், வெள்ளோட்டம் எனப் புதுமை பற்றியும், வெண்டேர் எனப் பொய் பற்றியும், (கானல் நீர்) வெளிற்றுப் பனை என உள்ளீடின்மை பற்றியும், வெளியார்முன் என இயல்பு பற்றியும், (அறிவின்மையாகிய பண்பு) |