பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 10, 11271

வண்ணம் - கருங்குழல்; வடிவு - வட்டப்பலகை; அளவு - முழத்துணி; சுவை - தீம்பழம். இவற்றுள் பல பிரயோக விவேகப் பண்புத்தொகை வகைகளுள் (22) குறிப்பிடப்பட்டுள்ளன.]

வடமொழியில் பண்புத்தொகை

99சிலபெய ரெச்சமும் சிலவினைத் தொகையும்
இருவகை உவமையும் வண்ணச் சினைச்சொலும்
பண்புத் தொகைஎனப் பகரும் வடநூல்.

எ-டு:

எண்ணும் பொருள் - எண்ணப்படுவதாகிய பொருள்; துணியும் பொருளும் அதுவே. இவ்விரண்டனையும் வேறு இலக்கணம் என்பர்.

உரைகல் - உரைக்கப்படுவதாகிய கல் என்பர்; செய் குன்றும் அது.

மதிமுகம், முகமதி என்புழி, உருபு இடையினும் ஈற்றினும் தொக்கது என்பர்.

செங்கால் நாரை, வெண்பூத்தாமரை என்பன வண்ணச் சினைச் சொற்கள்.

இவ்வாறு முறையே காண்க.

‘பகரும் வடநூல்’ எனவே தமிழ்க்கு அடாது என்க. ஆயின் ஈரிலக்கணமும் ஒன்று என்று பாயிரத்தில் கூறியது என்எனின், பெரும்பான்மை நோக்கி என்க.

[வி-ரை: வடமொழியில் தொகையான வேற்றுமைத் தொகை, எண்ணொடு பொருள் புணர்ந்த எண்தொகை, அன்மொழித்தொகை, பண்புத்தொகை, முன்னும் பின்னும் மொழியடுத்து வரும் இடைச்சொல் தொகை, உம்மைத் தொகை என