‘வாள்போலும் வேற்கண்’ ‘கோடாத செங்கோல்’ - சீவக. 7 ‘வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன்’ - கு. 563 ‘அடியளந்தான் தாஅய தெல்லாம்’ - கு. 610 -இவற்றுள் கண், கோல், கோலன், அரி என ஒரு சொல்லாகவே கொள்வர். இஃதன்றியும், கும்பகாரன், இசைகாரன், + பழிகாரன்- இவற்றையும் ஒரு சொல்லாகவே கொள்வர். பொருப்பன் - இதனுள் பொருப்பு என்னும் உரிமைப் பொருளை உடையான் முருகன் என்றும், பொருப்பிற்கு இறைவனாகிய குறிஞ்சியான் என்றும் பல சொல்லாகவே கொள்வர். இந்நான்கிற்கும் சொற்கிடந்தபடியே பொருள் கூறில் இலக் கணவழுவாதல் நோக்கி, இங்ஙனம் மாறுபடச் சூத்திரம் செய்தனம் என்க. இலக்கணவழுவாதலை விரிக்கின் பெருகும். [வி-ரை: கரிகரம் பணிபணம், வேலன்வேல் என்பனவற்றில் கரி, பணி, வேலன் என்பன காரணப்பெயர். கரத்தை உடையது, பணத்தை உடையது, வேலை உடையவன் என இவை பொருள்படும். இவற்றைக் காரணப்பெயராகவே கொண்டு பொருள் விரிக்கின் கரத்தை உடையதன் கரம், பணத்தை உடையதன் பணம், வேலை உடையவனது வேல் எனப் பொருள்பட்டுக் கூறியது கூறலாமாதலின் இக்காரணப் பெயர்களை யானை, பாம்பு, முருகன் என இடுகுறியாகவே கொள்க என்றார். தெய்வப் பெயர்களை ஏனைய உயர்திணைக்கும் அஃறிணைக்கும் இட்டு வழங்குங்கால், அவை தத்தம் காரணப் பொருள்களை விளக்காமல் அவ்வப் பொருள்களைச் சுட்டும் இடுகுறியாகவே வருதல் காண்க.
+ (பா-ம்) அலங்காரன். |