| ஒழிபியல் - நூற்பா எண். 30 | 301 |
‘மொழிப் பொருட்காரணம் விழிப்பத் தோன்றா’ என்ற நூற்பாவான் ஒவ்வொரு சொற்கும் வெளிப்படையாகப் புலப்பட்டோ புலப்படாமலோ காரணம் உண்மை விளக்கப்பட்டதனால், சொற்கள் யாவும் காரணம் பற்றியே வந்தன என்னும் இலக்கண நூல் கருத்து உணரப்படும். வாளைப்போலும் வேல் போன்ற கண், வளையாத செங்கோல், அஞ்சத்தக்கண செய்யும் வெங்கோலன் என்று சொல்லுக்குச் சொல் பொருள் கொண்டால், வேற்கண் - செங்கோல் - வெங்கோலன் என்ற சொற்கள் தம் அடைமொழிகள் கூறியவற்றையே தாமும் கூறலின் கூறியது கூறலாம் வழுவாதலின், இவற்றை - கண் - கோல் - கோலன் என்ற ஒரு சொல்லாகவே கொள்க. அடியளந்தான் என்புழி, ‘தாயது’ எனப் பின்னர் வருதலின், அஃது அரியென ஒரு பெயர் மாத்திரையாய் நின்றது. குடத்தைச் செய்பவன் - இசையில் வல்லவன் - பழியைச் செய்பவன் - என்று பொருள்படும் இரு சொற்கள் ஒருவனையே சுட்டலின், கும்பகாரன் முதலிய மூன்றும் ஒரு சொல்லாகவே கொள்ளப்படும். பொருப்பன் - பொருப்பிற்குக் கடவுள் ஆகியவன் என்ற பொருளில் வரும்போதம், பொருப்பினை ஆள்பவன் என்ற பொருளில் வரும்போதும் வெவ்வேறு சொற்களாகிய வெவ்வேறு பொருள்படும் என்பது. மாறுபடுதல் - இடுகுறியைக் காரணப்பெயராக மாற்றிக் கூறல் போன்ற செய்தி. ‘‘பணிபணம் - கரிகரலீலை - வஞ்சகரீரம் - கரிகளபம் - என்பன பூர்வபதமும் உத்தரபதமும் சமானார்த்தகம் என்பார்க்கு ‘வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன்’, ‘அடியளந்தான் தாயதெல்லாம்’, ‘கோடாத செங்கோல்’ என்பன போலக் கேவலபத மாத்திரையாய் நின்றன’’ - பி. வி. 26 உரை.] 30 |