பகுபத வகைகள் 117 | பகுபதத்து இலக்கணம் பகருங் காலை பகாப்பதம் தொடர்மொழி இரண்டினுள் படாமல் ஒருமொழி ஈற்றினும் தொடர்மொழி ஈற்றினும் பின்மொழி கெட்ட முன்மொழி ஈற்றினும் முன்மொழி கெட்ட பின்மொழி ஈற்றினும் அளவிலை யாகி வரும்விகு திகளில் பொருந்தும் விகுதிகள் பொருந்தல் அன்றியும்1, வேற்றுமை உவம உருபுகள் இடைநிலை சாரியை நான்கும் தனித்தும் பொருந்தியும்2, வேற்றுமைப் பொருள்களை ஏற்று நின்றும்3, ஒவ்வொரு வேற்றுமை வெவ்வேறு ஆகியும்4, இதனை உடையது இதுஎன நின்றும்5, இதனது உடைமை இதுஎன நின்றும்6, இடப்பொருள் உணர்த்தும் வினாச்சுட்டு எண்பெற இடைச்சொல் ஆகியே எழுந்து நின்றும்7, தன்மை மாத்திரம் தானாய் நின்றும்8, பெயர்ச்சொல் முதலா நான்கினும் பிறந்தும்9, பெயர்தான் அறுவகை யாகப் பிரிந்தும்10, பகுபதம் ஆயினும் பலகுணப் படலால் பகாப்பதம் என்னப் பெயர்படல் அன்றியும்11, வினைக்குறிப்பு முற்று வினைக்குறிப் புப்பெயர் இருவகை யெச்சம் எனப்பெயர் பெற்றும்12, பகாப்பதப் பொருள்படப் பகுபதம் ஆகியும்13, பகாப்பதச் சொல்படப் பகுபதம் ஆகியும்14, பகுத்தலை ஏற்றும் பகாமையை ஏற்றும், இவ்விரு குணத்தையும் ஒருங்கே ஏற்றும்15, பலசொல் ஒருபொரு ளாகப் பட்டும்16, பலபொருள் ஒருசொல் ஆகப் பட்டும்17, இன்னும் பலவாய் இயலும் என்ப.
| |
|
|
|