பெண்டுகள், வேசையாள் வேசையார், உமையாள் உமையார், தையலாள் தையலார், பேதையாள் பேதையார், [பெதும்பையாள் பெதும்பையார் முதலாயினவும் அது] என இங்ஙனம் விரியும் என்க. அஃறிணை இயற்பெயர் - வெளி. ‘சிவிகை பொறுத்தான்’ - கு. 37 வறியவன் இரந்தான் ‘தானும் அதனை வழங்கான் பயன்வ்வான் -நாலடி. 276 இவை வருமொழி நோக்காமலே தனக்குரியஒருமைப்பாலைவிட்டுப் பன்மைப்பாலையே விளக்குதலால் உயர்திணைச் சாதி ஒருமை ஆயிற்று. இவ்விதியை மறந்து கிவிகை பொறுத்தார் எனக் குறளைத் திருத்தினாரும் உளர். அவர், ‘இல்வாழ்வான் என்பான்’ - கு. 41 ‘அவ்வித்து அழுக்காறு உடையானை’ - கு. 167 ‘உடையான் அரசருள் ஏறு’ - கு. 381 ‘செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை’ -கு. 1151 என முப்பாலினும் (அறம், பொருள், காமம்) மிகவும் பரந்து பெரும்பான்மை வருதலை நோக்கிலர் போலும். இவற்றைத் திருத்த மறந்தனர் போலும் என்க. ‘நூல்எனப் படுவது நுவலுங் காலை’ தொ. பொ. 478 ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’ -கு. 428 ‘உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்’ -கு. 850 ‘நேர்வது நாடு’ -கு. 733 ‘விளைவது நாடு’ -கு. 732 |