பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 44347

இவை வருமொழி நோக்காமலே தனக்குரிய ஒருமைப்பாலை விட்டுப் பன்மைப்பாலையே விளக்குதலின், அஃறிணைச் சாதி ஒருமை ஆயிற்று.

‘எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு’                                       -கு. 392

இதனுள் உயர்திணைச் சாதிப்பன்மையும், அஃறிணைச் சாதிப் பன்மையும் காண்க.

‘கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்’                                       -கு. 567

பொருள்கருவி காலம் வினைஇடனொ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்’                                        -கு. 675

இவற்றுள் அரம் என்பதும் ஒடு என்பதும் ஒரு சொல் நின்றே தனித்தனி உதவுதல் காண்க. முதல்நிலைத் தீவகம் இடைநிலைத் தீவகம் கடைநிலைத் தீவகம் முதலாயினவும் அது.

இவ்வேழும் நின்றநிலை தப்பிப் பிரிந்தது காண்க. இவற்றுள் உயர்திணை இயற்பெயர் இல்லை என்பாரும், அஃறிணை இயற்பெயரும் சாதி ஒருமையும் ஓர் இலக்கணமே என்பாரும், உயர்திணைச் சாதி ஒருமையும் அஃறிணைச்சாதி ஒருமையும் ஓரிலக்கணமே என்பாரும், சாதிப்பன்மை இல்லை என்பாரும், ஒரு சொல் நின்று தனித்தனி உதவுதலைப் பொருள்கோளினும், பிரிப்பு எச்சத்தினும் அடங்குவாரும் உளர். அவர் இலக்கண நுட்பம் கூர்ந்திலர் போலும். அவர்களை மறுக்கில் பெருகும் என்க.

இப்பிரிவு ஏழும் ஒன்பது பொருள்கோளில் அடங்கா.

[வி-ரை: பிரயோகவிவேக நூலார் 50-ஆம் காரிகை உரையில், சாதி ஒருமையைச் சாதிஏகவசனம் என்பர்.