பக்கம் எண் :

62இலக்கணக் கொத்து 

நூற்பெயர்-இலக்கணக்கொத்து.

யாப்பு-நவையறு விதிகள் கற்பவர்க்கு எளிதினில் புலப்படவே தொகுத்தமை.

முதலியபொருள்-முன்னோர் இலக்கண இலக்கியங்களும் வட மொழி இலக்கணமும் கூறும் அரிய விதிகள்.

கேட்போர்-இந்நூல் புலக்கணத்தது என்னும் நன்மக்கள்.

பயன்-அரியவிதிகள் எளிதினில் புலப்படல்.

எளிய விதிகளைவிடுத்து அரிய விதிகளையே நிரலாக அமைத்துத் தாம் வரைந்த உரையால் எளிதில் புலப்படுத்தியுள்ளமை இந்நூல் முழுதும் காணப்படும்.

[பாயிரப் பகுதியாக அமைந்துள்ள முதல் பன்னிரு நூற்பாக் களையும் பாயிரவியல் என்று கொள்வோம்.]