பக்கம் எண் :

72இலக்கணக் கொத்து 

6ஒருசூத் திரத்தின் உள்ளே ஓரின்
ஒருவிதி யதனை ஒருவிதி ஒழிக்கும்

‘ஞணநம லவளன ஒற்றுஇறு தொழிற்பெயர்
ஏவல் வினைநனி ய-அல் மெய்வரின்
உ-உறும் ஏவல் உறாசில சில்வழி’.                                      ந. 207

இஃது ஒரு சூத்திரத்தினுள் ஒன்றனை ஒன்று ஒழித்தல்.

[வி-ரை: மெய்யீற்று முதல்நிலைத்தொழிற்பெயர்களும் ஏவல் வினைகளும் உகரச்சாரியை பெறும் என்ற பொதுவிதியை, சில ஏவல்கள் உகரச்சாரியை பெறா என்று அச்சூத்திரத்திலேயே விலக்குதல், ஒரு சூத்திரத்தினுள்ளே ஒரு விதியைப் பிறிதொரு விதி விலக்கியமைக்கு எடுத்துக்காட்டு.]

7நூலா சிரியர் கருத்தினை நோக்காது
ஒருசூத் திரத்திற்கு ஒவ்வொரா சிரியர்
ஒவ்வொரு மதமாய் உரைஉரைக் குவரே

எழுத்தினுள் உயிர்மெய்யை உம்மைத்தொகை என்றும், அன் மொழித்தொகை என்றும், வேற்றுமைத்தொகை என்றும் உரைப்பர். சொல்லினுள் மக்கட்சுட்டை அன்மொழித்தொகை என்றும், இருபெயரொட்டுஆகுபெயர் என்றும், பின்மொழி ஆகுபெயர்ப் பண்புத்தொகை என்றும் உரைப்பர். பொருளினுள், ‘வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது’ (தொ. பொ. 188) என்புழி, மூன்றினைப் பதி பசு பாசம் என்றும், தத்துவமசி வாக்கியம் என்றும், அறம் பொருள் இன்பம் என்றும், எழுத்துச் சொற்பொருள் என்றும், ஆண்டு என்றும் உரைப்பர். இவை ஒரு சூத்திரத்திற்கே பலரும் பலவிதமாய் உரைத்தல்.

[வி-ரை: உயிர்மெய்யில் உயிரெழுத்தின் ஓசையும் கலந்திருத்தலின், ஓசை பற்றி நோக்குமிடத்து உயிர்மெய் உம்மைத்தொகையாம்; மாத்திரைபற்றி நோக்குமிடத்து உயிர்மெய் உயிர்மாத்திரையாயே நிற்றலின் அன்மொழித் தொகையாம்; சொற்பொருள் விளக்கம் காணுமிடத்து உயிர்மெய் என்பது உயிரோடு கூடிய மெய் என்று பொருள்படுதலின் வேற்றுமைத்தொகையாம். இஃது எழுத்ததிகாரச்செய்தி.