| பாயிரவியல் - நூற்பா எண். 6 | 73 |
மக்களாகிய சுட்டு யாதன்கண் நிகழும் அது மக்கட்சுட்டு எனப் பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்பர் சேனாவரையர். மக்கள் என்று சுட்டப்படும் பொருள் என இருபெயரொட்டாகுபெயர் என்பர் நச்சினார்க்கினியர். சுட்டு என்பது சுட்டப்படும் பொருளை ஆகுபெயரான் உணர்த்த மக்கள் என்பது அவ்வாகுபெயர்ப் பொருளை விசேடித்தலின் பின் மொழி ஆகுபெயர்ப் பண்புத்தொகை என்பர் சிலர். சிவஞான முனிவரும் இவ்வாசிரியரும் இக்கருத்தினர். இது சொல்லதிகாரச் செய்தி. ‘வேண்டிய கல்வியாண்டு மூன்று இறவாது’-தொ. பொ. 188 மூன்று - பதி பசு பாசம் என்பர் சைவர். தத்துவ மசி வாக்கியம் என்பர் வேதாந்திகள். அறம் பொருள் இன்பம் என்பர் உலகியல் நோக்குவார். எழுத்துச் சொற்பொருள் என்பர் இலக்கண நூலார். மூன்று ஆண்டுகள் என்பார் நேரிய பொருள் காண்பார். இஃது பொருளதிகாரச் செய்தி.] நூலாசிரியர் கருத்தினை நோக்காது இனிச் சொல்லை நித்தியம் என்றும், அநித்தியம் என்றும், வியாபகம் என்றும், ஏகதேசம் என்றும், பொருள் என்றும், பொருள் அன்று என்றும், கடவுள் கட்டினது என்றும், அறிவாரும் அறியாரும் சாதியாரும் சமயத்தாரும் தேசத்தாரும் காலத்தாரும் தத்தமக்கு வேண்டியவாறே கட்டினது என்றும், ஒருவரானும் கட்டப்பட்டதன்று தானே அநாதியாய் உள்ளது என்றும் சொல்லும் பொருளும் சாத்தனது ஆடை போல வேற்றுமை என்றும், கோட்டது நூறு போல ஒற்றுமை என்றும் அர்த்தநாரீச்சுரன் போல வேற்றுமைக்கும் ஒற்றுமைக்கும் பொது என்றும் இன்னும் பலவாற்றானும் பலரும் கூறுவர். அவை நிற்க, இனி, தொல்காப்பியர் ஒருவர் தாமே அச்சொல்லை, ‘அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்’ - தொ.சொ. 316 என இயற்றுதற்கருத்தாகவும், ‘அம்ம கேட்பிக்கும் - தொ.சொ. 278 என ஏவுதற்கருத்தாவாகவும், |