| பாயிரவியல் - நூற்பா எண். 6 | 75 |
‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும்’ - தொ. சொ. 158 எனக் காரணமாகவும், ‘கொடைஎதிர் கிளவி’ - தொ. சொ. 109 எனச் சம்பிரதானமாகவும், ‘முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும் இருமொழி மேலும் ஒருங்குஉடன் நிலையலும்’ - தொ. சொ. 419 என அதிகரணமாகவும், ‘அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும், - தொ. சொ. 316 ‘ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல்’ - தொ. சொ. 2 ‘முதல்அறி கிளவி’, சினைஅறி கிளவி’ - தொ. சொ. 115 ‘அம்ம கேட்பிக்கும்’ - தொ. சொ. 278 எனக் கருத்தாவாகவும் சொல்லைக் கூறுவர். அவை யெல்லாம் உபசாரம் என்க. ‘கமம்நிறைந்த இயலும்’ - தொ. சொ. 355 ‘உரு உட்குஆகும்’ - தொ. சொ. 302 ‘செல்லல் இன்னல் இன்னா மையே’ - தொ. சொ. 304 ‘எல்லே விளக்கம்’ - தொ. சொ. 271 ‘கொல்லே ஐயம், - தொ. சொ. 270 எனச்சொல்லும் பொருளும் பேதமிறின் அபேதமாகக் கூறுதலின், தொல்காப்பியருக்கும் அதுவே கருத்து என்க. இனி, சேனாவரையரும் சத்தநூலார் உரைத்தாங்கு உரைப்பர். நச்சினார்க்கினியர் சத்தநூலாரோடு மாறுபடச் சொல்லைப் பொருள் உணர்த்தற்குக் கருவி என்பர். தார்க்கிகர் சுவரூபசம்பந்தம் என்பர்.’ - பிர. விவே. 18 உரை |