| பாயிரவியல் - நூற்பா எண். 7 | 93 |
பிரத்தியயம், பதார்த்தம், சேதனாசேதனம், லிங்கம் புருடத்திரயம் என்று குறியிடப்பட்டுள்ளன. தேற்றம் இரட்டித்தலாவது ‘ஒன்றே என்றே’ என்பது. இச்சிறுபான்மை வேறு பாட்டினைப் பிரயோகவிவேக நூலார். ‘சாற்றிய தெய்வப் புலவோர் மொழிக்கும் தமிழ்மொழிக்கும் வேற்றுமை கூறின் திணைபால் உணர்த்தும் வினைவிகுதி மாற்றருந் தெய்வ மொழிக்கில்லை; பேர்க்குஎழு வாய்உருபும் தேற்றிய லிங்கம் ஒருமூன்றும் இல்லை செழுந்தமிழ்க்கே’ 49 என்று குறிப்பிட்டவாறே இவர் உரைநடையில் குறிப்பிட்டுள்ளார். இனி, தமிழ் நூல்களை உணர்தற்கு வடமொழி அறிவு பெரிதும் பயன்படும் என்பதன்றித் தமிழிற்கும் வடமொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்று கூறுவது பொருந்தாது என்பதனைச் சிவஞான முனிவர் சூத்திரவிருத்தியில், ‘‘தொல்காப்பியன் தன் நூலை ஐந்திரம் நோக்கித் தொகுத்தான் எனின், தமிழ்மொழிப் புணர்ச்சிக்கண்படும் செய்கைகளும் குறியீடுகளும், வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி வெட்சிமுதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியில் பெறப்படாமையானும், இவையெல்லாம் தானே படைத்துக் கொண்டு செய்தான் எனின் ‘முந்து நூல் கண்டு, என்பதனோடு முரணுதலானும், முற்காலத்து முதல் நூல் அகத்தியம் என்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூல் என்பதூஉம் துணியப்படும் என்க’’ என்று கூறி மறுத்துள்ளமை நோக்கத்தக்கது.] 5 | அ. | எளியவிதிகளை யாவரும் அறிவார் அரிய விதிகளை அறையின்அறி வார் இலை |
எளிய விதியாவது உயிர் பன்னிரண்டு, உடம்பு பதினெட்டு - இவை போல்வன என்க. அரியவிதியாவது, ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ - தொ. எ. 46
|