பக்கம் எண் :

92இலக்கணக் கொத்து 

வெண்குடைப் பெருவிறல் என்பது, செங்குடை முதலியவற்றோடு இயைபு நீக்காது வெண்குடையோடு இயைபின்மை மாத்திரை நீக்கி நின்றாற்போலப் ‘பன்மை சுட்டிய’ என்பதும் ஒருமை இயைபு நீக்காது, பன்மை சுட்டுதலோடு இயைபின்மை மாத்திரை நீக்கிநின்றது. இஃது இயைபின்மை நீக்கமாம். கருங்குவளை என்பது, செம்மை முதலியவற்றோடு இயைபு நீக்குதலின் பிறிதின் இயைபு நீக்கமாம். எனவே, விசேடித்தல் இருவகை ஆயின. - தொ.சொ.184நச்.

ிறிதின் இயைபு நீக்குதலை அந்நியயோகவியவச்சேதம் என்றும், இயைபின்மை நீக்குதலை அயோகவியவச்சேதம் என்றும் கூறுவர். -பி.வி.50உரை

வடநூலார் இயைபின்மை நீக்குதலை அயோகவிவச்சேதம் என்றும் பிறிதின் இயைபு நீக்குதலை அந்யோகவிவச்சேத மென்றும் கூறுப. -இ.வி.332உரை

இங்ஙனம் ஆசிரியர் பலரும் குறிப்பிடும் இயைபின்மை நீக்குதலை இவ்வாசிரியர் பிறிதின் இயைபின்மை நீக்குதல் என்று சுட்டுவது மயக்கம் தருகிறது.]

4வடமொழி தமிழ்மொழி எனும்இரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக.

குணத்தை உடையது குணி; பண்பை உடையது பண்பி; இவை மொழியான் வேறு என்பது திண்ணம். இவை போல உடைமை, உடையான், பகுதி, விகுதி, பகுபதம், உருபு, பொருள், திணை, பால், இடம்-இப்பத்து முதலிய இலக்கணம் எல்லாவற்றானும் ஒன்றே என்பது தோன்றத் தேற்றம்இரட்டித்தாம். இனிச் சிறுபான்மை மிகவும் அருகி இலக்கணமும் வேறுபடும் என்பது தோன்ற ‘எண்ணுக’ என்றாம். வேறுபடுதலாவது இருதிணையும் ஆண்பால் பெண்பால் வினையீறும் வடமொழிக்கு இல்லை. மூன்று லிங்கமும் முதல் ஈற்று வேற்றுமைகட்கு உருபுகளும் தமிழிற்கு இல்லை. மேலும் ஆண்டாண்டுக் காட்டுதும்.

[வி-ரை: உடைமை முதலியன வடமொழியில் முறையே திரவியம், திரவியவிசிட்டன், பிரகிருதி, விகிருதி, கண்டபதம்,