பக்கம் எண் :

 பாயிரவியல் - நூற்பா எண். 795

[வி-ரை: ‘மெய்யின் இயக்கம்’ என்ற நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் வரைந்துள்ள உரையை நோக்குக. எழுத்துக்களுக்கு அகரம் காரணமாதல், உலகுக்கு இறைவன் காரணமாதல் முதலியவற்றை விளக்குதல் அரிது ஆதலின். இவை அரிய விதிகள் எனப்பட்டன.

அகரமொடு சிவணும் - அகரம் உரு எழுத்து
அகர முதல - அகரம் ஒலி எழுத்து
அகர உயிர் இன்றேல் - அகரம் உணர்வெழுத்து

அகரம் போல, அகர உயிர் போல - அகரம் தன்மை எழுத்து - என்று விளக்கங் கூறின், பொருள் மாறுபட்டுக் குற்றம் ஏற்படும் அங்ஙனம் குற்றப்படாமல் யாண்டும் அகரம் ஒலி எழுத்தே என்று கூறி விளக்கினும் விளக்கிக் கொள்ளுதல் அரிது.

உரு எழுத்து - வரிவடிவில் எழுதப்படும் எழுத்து; என்னை?

‘காணப் பட்ட உருவம் எல்லாம்
மாணக் காட்டும் வகைமை நாடி
வழுவில் ஓவியன் கைவினை போல
எழுதப் படுவது உருஎழுத் தாகும்’                                    ஆதலின்.

ஒலி எழுத்து - உந்தியில் தோன்றி வெளிப்படும் காற்று வெளிவரும் ஒலியால் உணரப்படும் எழுத்து; என்னை?

‘இசைப்படு புள்ளின் எழாஅல் போலச்
செவிப்புலன் ஆவது ஒலிஎழுத்து ஆகும்,                              ஆதலின்.

உணர்வு எழுத்து - மந்திரங்களுக்கு அறிகுறியாக வரையப்படும் அடையாளத்தால் உணரப்படும் எழுத்து; என்னை?

‘கொண்டஓர் குறியால் கொண்ட அதனை
உண்டுஎன்று உணர்வது உணர்வுஎழுத்து ஆகும்’                         ஆதலின்.

தன்மை எழுத்து - எடுத்தல் படுத்தல் நலிதல் ஓசை தோன்ற செவிப்புலனாக ஒலிக்கப்படும் எழுத்து; என்னை?