‘முதற்கா ரணம் துணைக்கா ரணமும் துணைக்கா ரணத்தொடு தொடரிய உணர்வும் அவற்றொடு புணர்ந்த அகத்துஎழு வளியின் மிடற்றுப் பிறந்து இசைப்பது தன்மை எழுத்தே’ ஆதலின். தொல்காப்பியனார் மூக்கினை முயற்சிக் கருவியாகக் கூறவும் நன்னூலார் பிறக்கும் இடமாகக் கூறினார். எழுத்தொலி மேல்வாயை அடைந்து உரலாணி இட்டாற்போலச் செறிதலான் யகரம் பிறக்கும் எனத் தொல்காப்பியனார் கூறவும் நன்னூலார் ‘அடிநா அடிஅணம் உறய-தோன்றும்’ (ந. 82) என மாறுபட்டுக் கூறினார். தொல்காப்பியனார் ஏழ் என்பதனை ழகர ஈற்றுச் சொல்லாக் கொண்டு அதன் புணர்ச்சிவிதியைப் புள்ளி மயங்கியலில் விளக்கியிருப்பவும், நன்னூலார் அதனை ஏழு என்ற உகர ஈற்றுச் சொல்லாகவே கொண்டு உயிரீற்றுப் புணரியலில் சுட்டினார். உயிர்மெய்யை ஒரே எழுத்தாகக் கொள்வது ஒற்றுமை நயம். உயிர்மெய்யை உயிரும் மெய்யும் என்ற இருவேரு எழுத்துக்களாகக் கொள்வது போல்வது வேற்றுமைநயம். இவ்விரண்டும் இலக்கண நூல்களுக்கு இடம் நோக்கி இன்றியமையாதன. இரு வேறுபட்ட கருத்துக்கள் இருப்பின் காரணம் காட்டி இரண்டனையும் தழுவுதலும், காரணம் காட்டி இரண்டனையும் மறுத்து மூன்றாவது கருத்து ஒன்று கோடலும் விளக்கப்பட்டன. ‘எளியவிதிகளை அறிந்தும் பயன் படுத்துவார் இலர்; அரியவிதிகளை அறிபவரே மிகச் சிலராவர்’ என்று ஆசிரியர் வருந்துகிறார்.] 5 | ஆ. | அதனால் அவையால் பயன்இலை அதனால் பயன்படு சிலவிதி பகர்ந்தனன் என்க |
முன்னோர் நூல்களுள் வெள்ளிடைமலைபோல விளங்கிக் கிடந்து பயன்படு விதிகள் அளவில்லை. அவற்றுள் இலைமறைகாய் போலக் கரந்து கிடந்து பயன்படாதன சிலவற்றுள் சிறிது எடுத்து உரைத்தனன் என்பது தோன்றப் ‘பயன்படு விதிசில’ என்றும், அவையடக்கத்துள் ‘சிறிது’ என்றும் கூறினாம். புதிது ஒன்றும் இன்று என்பது இதனால் அறிக. [வி-ரை: எல்லோரானும் அறியப்படும் எளியவிதிகளை இலக்கண ஆசிரியர் பலரும் எடுத்தோதியுள்ளமையானும், அவை |