பக்கம் எண் :

6இலக்கணக் கொத்து 

வந்துள்ளன. தமிழ்மொழியில் வல்லவராய், வடமொழிவிதிகளுள் சிலவற்றை அறிந்தவர்கட்கே இந்நூல் பயன்படும் வடமொழி சிவணாது தமிழிலக்கணம் ஒன்றனையே இந்நூல் குறிப்பிடவில்லை. ஏனெனின், பண்டையோர்கள் இலக்கணம் - இலக்கியம் - ஏது - நிமித்தம் - சாத்திரம் - சூத்திரம் - தந்திரவுத்தி - பகுதி - விகுதி - பதம் - பதார்த்தம் - ஆதி - அந்தம் - அகாரம் - மகாரம் - உதாரணம் - மாத்திரை - உவமை - உருவகம் - விகற்பம் - சந்தி - விதி - அலங்காரம் - காலம் - இலேசம் - காரகம் - ஞாபகம் - விசேடணம் - விசேடியம் - விகாரம் - அதிகாரம் - குணம் - குணி முதலிய சொற்களையும், பிறிதின் இயைபின்மை நீக்குதல் - பிறிதின் இயைபு நீங்குதல் முதலிய மொழிபெயர்ப்புக்களையும் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நூல்கள் பலவாக இருப்பினும், ஒன்றுகூடத் தனித்தமிழில் அமையவில்லை. தமிழுக்கென்றே உரிய சிறப்பெழுத்துக்கள் ற - ன - ழ - எ - ஒ என்ற ஐந்தே. இவ் வைந்தெழுத்துக்களைக்கொண்டே தனித்து ஒருமொழி இயங்கும் என்றுகூற அறிஞர் நாணுவர். வடமொழி தமிழ்மொழி என்னும் இருமொழியினும் இலக்கணம் ஒன்றே என்று கொள்க. எளிய விதிகளை யாவரும் அறிதல்கூடும் அரிய விதிகளைக்கூறின், விளங்கிக்கொள்பவர் இரார். எளிய விதிகளைக் கூறுதலால் பயனில்லை என்பதனை உட்கொண்டு, பயன்படும் விதிகள் சிலவே ஈண்டுக்கூறப்பட்டுள்ளன. முன்னுக்குப்பின் மாறுபாடு தோன்றின், அவற்றுள் ஒன்று பிறன்கோள் கூறலாக அமையும் என்பது கொள்க. முன்கூறியனவே, பின் ஒரு காரணம்பற்றி மீண்டும் கூறப்படின் அவற்றை அநுவாதம் என்று கொள்க. தமிழ்மரபல்லா விதிகள் சில கூறப்பட்டுள்ளன; அவை வடமொழி மரபு பற்றிய விதி எனக்கொள்க. ஐந்திலக்கணங்களுள், சொல்லிலக்கணம் ஒன்றனையே வேற்றுமை - வினை - ஒழிபு - என்ற முப்பகுப்புக்களாக்கி விளக்கியுள்ளேன். பலகாலும் பழகினும் தெரியாத செய்திகள் தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார் என்ற மூன்று நூல்களினும் காணப்படும். அவற்றுள்ளும் இலையேல் வடமொழி நூல்கள் வாயிலாக உணரப்படும்’’ என்று விளக்கியுள்ளார்.

‘‘சில நூற்பாக்களின் கருத்துக்கள் உணர்வதற்கு அருமையானவாய் இருப்பின், முன்னும் பின்னும் உள்ள நூற்பாக்களை நோக்கி அவற்றின் கருத்துக்களை உள்ளவாறு