பக்கம் எண் :

104இலக்கணக் கொத்து 

திருக்கோவையாரின் பெருமையும் சைவநூல்களின் பெருமையும் பரக்கக் கூறப்பட்டுள்ளன. இங்ஙனம் வரைவதற்கு ஆசிரியருடைய சைவசமயப்பற்றே காரணம் என்பது கொள்க.

இவர் காலத்தில் வாழ்ந்து இவர் நூல் வரைவதன் முன் பிரயோகவிவேகம் என்ற சொல்லிலக்கணநூலை உரையுடன் வரைந்த சுப்பிரமணிய தீக்கிதர்தம்நூலுரையில் தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார் என்ற மூன்றனையுமே பலகாலும் எடுத்துக்காட்டாகத் தந்ததைக் கண்ணுற்று இவ்வாசிரியரும் ‘பல்கால்..............முழங்கும்’ என்று குறிப்பிடுகிறார்.]

இக்கருவி பத்தனுள் ஒன்றே குறையினும், இந்நூல் பார்த்தார்க்குச் சிறிதாயினும் பயன்படாது; வாணாள் வீணாள் கழித்தலேயன்றி இந்நூற்குக் குறைகூறிச் சூத்திரம் உதாரணம் அரும்பதவுரை எல்லாவற்றையும் திருத்தி வரம்புஅழித்துப் புறன் பழிப்பர்.

ஆகையால் தொல்காப்பியம் திருவள்ளுவர் முதலிய நூல்களைக் குறைபடாமல் முழுதும் உணர்ந்து அவைகளில் தடைபட்ட இடத்து அத்தடை தீர்க்கும் கருத்து உண்டாயின், இது பயன்படும். ஆகையால் அவர் மாத்திரத்திற்கே இது நூல், மற்றையோர்க்கு இது நூல் அன்று என்னும் கருத்தான் அவையடக்கத்துள் ‘ஈது ஒரு நூல் அன்றே’ என்றாம்.

உரை கொள்ளுதற்கருவியாகிய இச்சூத்திரமும் முற் சூத்திரமும் உபலக்கணம். அஃது எங்ஙனமெனின், ‘உடம்பினுள் உயிர் கூடின் கண்கானும், நீங்கின் காணாது’ இத்தொடர் ஒழிந்த தொண்ணூற்றைந்தும் அதுவே என்று தானே பொருள்தரும் அதுபோல, எழுத்து முப்பத்துமூன்று முப்பது என்று கூறுதல், மாறுபட்டுள்ள விதிகட்கு எல்லாம் பொதுவாய் நின்று பல பொருள் தருதல் என்க.

‘நூல்செய் தவன்அந் நூற்குஉரை எழுதல்
முறையோ எனினே அறையக் கேள்நீ
முன்பின் பலரே என்கண் காணத்
திருவா ரூரில் திருக்கூட் டத்தில்