| பாயிரவியல் - நூற்பா எண். 7 | 105 |
தமிழ்க்குஇலக்கு ஆகிய வைத்திய நாதன் இலக்கண விளக்கம் வகுத்துஉரை எழுதினன்; அன்றியும் தென்திசை ஆழ்வார் திருநகர் அப்பதி வாழும் சுப்பிர மணிய வேதியன் தமிழ்ப்பிர யோக விவேகம் உரைத்துஉரை எழுதினன் ஒன்றே பலவே’ இஃது உரைச்சூத்திரம். இந்நூல் முழுதினுள்ளும் இடையிடையே இங்ஙனம் உரைச்சூத்திரமும் உதாரணச் சூத்திரமும் வேண்டிய வேண்டிய இடத்துச் செய்தனம் என்க. (வி-ரை: இந்நூற்பாவில் கூறப்பட்ட கருவிகள் பத்தும் குறைவின்றிப் போற்றப்படவேண்டும் என்பது. இந்நூல் கற்றற்கு அதிகாரிகள் ஆவார் யாவார் என்பது குறிப்பிடப்பட்டது. உபலக்கணம் - மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்றி முடித்தலாம். கண்காணும் என்றால், காது கேட்கும், வாய் பேசும் முதலியனவும் கோடல் அதற்கு எடுத்துக்காட்டு. உடம்பில் உறுப்புக்கள் 96 என்பது சான்றோர் கொள்கை. எழுத்தின் எண் பற்றி 33, 30 என்ற மாறுபட்ட கருத்து இருப்பதுபோல, ஏனைய இலக்கணச் செய்திகளிலும் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்படும் என்பது கொள்க. இவ்வாசிரியர் இந்நூல் யாப்பதனுக்கு முன்பே திருவாரூர் வைத்தியநாத தேசிகரும், திருக்குருகூர்ச் சுப்பிரமணிய தீக்கிதரும் முறையே இலக்கணவிளக்கம், பிரயோகவிவேகம் என்னும் நூல்களை யாத்துத் தாமே உரையும் வரைந்தனர் என்பது. அவர்கள் செய்த செயலே இவ்வாசிரியரும் தம் நூலுக்குத் தாமே உரை வரைவதற்கு முன்னோடியாக அமைந்தது. உரையில் இடையிடையே உரைச்சூத்திரங்கள் பலவற்றைப் பிரயோகவிவேக நூலார் யாத்துள்ளார். அவர் முறையைப் பின்பற்றி இவ்வாசிரியர் உரைச்சூத்திரங்களை வரையக்கருதித் தம் நூல் உரையுள் அருகியே வரைந்துள்ளார்.] |