எந்நூல் நோக்குதற்கும் பொதுவான கருவிகள் 8 | சூத்திரம் சிலசில நோக்குதற்கு அரிதேல் முன்பின் பார்த்துப் பின்பே நோக்குக1 ; விதிகளில் சிலசில வெளிப்படா ஆயின், உபலக் கணத்தினை ஓர்ந்தே உணர்க2 ; தாம்முன் அறிந்ததற்கு ஈதுமா றாயின் எந்நூல் விதியோ எனவே எண்ணுக3 ; சிலநாள் பழகின் சிலவும் பலியா, பலநாள் பழகின் பலிக்கும் என்க4 ; விரைவால் பார்க்கின் தெரியாது ஒன்றும், விரையாது ஏற்கின் கருகாது என்க5 ; வருவதில் கருத்தினை மட்டுப் படுத்தி’ வந்ததில் சிந்தையைச் சிந்தாது இறக்குக6 ; நூலினை மீளவும் நோக்க வேண்டா, சூத்திரம் பல்கால் பார்க்கவே துணிக7 ; மாரிபோல் கொடுப்பினும் மந்தனைவிட்டுக் கூரிய னுடனே கொத்தும் பழகுக8 ; வேறுஒரு கருமத் தினைமனத்து எண்ணின், ஆரியன் ஆயினும் அப்பொழுது ஒழிக9 ; சொல்பயில் விப்பவன எப்படிச் சொற்றனன்’ அப்படி ஒழுகி, அரும்பொருள் பெறுக10 . | |
இதுவும் அது! வியங்கோள் பத்தும் கருவியாகலின். ஆயின் அக் கருவியோடு சேர்க்காது பிரித்தது என்னெனின், அவை இந்நூற்கே. இவை இந்நூற்கும் எந்நூற்குமே; அன்றியும் அத்துணை நுட்பமன்று என்க. 1 | சூத்திரம் சிலசில நோக்குதற்கு அரிதேல் முன்பின் பார்த்துப் பின்பே நோக்குக |
சில சூத்திரவிதி கருகிற்றாயின், அப்பொழுது அழுந்தற்க. அந்நூலின் முன்பின்னாவது, தாம் முன்பே கண்ட நூற்கண்ணாவது, பின்பு கற்கும் நூற்கண்ணாவது அவ்விதி வெளிறிக் கிடக்கும். அதுகண்டு தெளிந்து பின்பு அழுந்துக. |