பக்கம் எண் :

 பாயிரவியல் - நூற்பா எண். 7107

[வி-ரை: சில நூற்பாக்கள் அவற்றை வாசித்த அளவில் பொருள் புலனாகாவாயின், முன்னும் பின்னும் உள்ள நூற்பாக்களைப் பார்த்து அவற்றின் துணைகொண்டு அந்நூற்பா உரையினைத் தெளிவாக அறிக. எடுத்துக்காட்டாக,

‘ணனமுன்னும் வஃகான் மிசையும்-ம குறுகும்’                          - ந. 96

என்ற நூற்பாவினை

‘லளமெய் திரிந்த னணமுன் மகாரம்
நைந்துஈ ரொற்றாம் செய்யு ளுள்ளே’                                - ந. 120

என்ற நூற்பாத் துணைகொண்டு தெளிய அறிகிறோம்.]

2விதிகளில் சிலசில வெளிப்படா வாயின்
உபலக் கணத்தினை ஓர்ந்தே உணர்க

உபலக்கணமாவது-‘’

‘அஇ உம்முதல் தனிவரின் சுட்டே்’                                   - ந. 66

என்புழி, முதல் கூடிவரின் சுட்டே என்றும் பொருள் கொள்ளுதல் இவ்விலக்கணம் நோக்காது, ‘தனித்து நிற்பின் சுட்டோ, கூடிநிற்பின் சுட்டு அன்றோ’ என்று கருதி, நன்னூலார்க்குப் பின்னூலார் இச்சூத்திரத்திற்கு அளவிறந்த குற்றம் கூறினர். அது நிற்க, அவர் எழுத்திற்குப் பெயரிடுதல் நோக்கியும்,

‘எகர வினா முச்சுட்டின் முன்னர்’                                    - ந. 163

எனச் சந்தி நோக்கியும்,

‘இவை அடை சுட்டு வினா’                                          - ந. 276 

எனப் பெயரிடுதல் நோக்கியும்,

‘தூக்கின் சுட்டு நீளின்’                                             - ந. 163

என யாப்பு நோக்கியும் இங்ஙனம் கூறி, பின்,

‘சுட்டுயா எகர வினாவழி’                                           - ந. 106

‘வினைத்தொகை சுட்டுஈறு ஆகும் உகரம்’                             - ந. 179

‘சுட்டு வகரம் மூவினம் உற’                                         - ந. 235

‘வ-இறு சுட்டிற்கு அற்று உறல் வழியே’                               - ந. 250

‘சுட்டின்முன் ஆய்தம் அன்வரின் கெடுமே’                            - ந. 251

‘அதுமுன் வரும் அன்று’                                            - ந. 180