பக்கம் எண் :

108இலக்கணக் கொத்து 

என்று, கூடி நிற்பினும் சுட்டு என்று கூறினர். இவ்விலக்கணங்களையும் நோக்கிலர். அது நிற்க, ‘தனிவரின் சுட்டு’ - ந. 66
என்னும் சூத்திரம் ‘இன்னென வரூஉம்’ - தொ. எ. 131
என்னும் சூத்திரம் போல விகாரப்பட்டது என்று யாப்பு விதியையும் நோக்கிலர். அது நிற்க,

‘ஒரு மொழி ஒழிதல் இனங்கொளற்கு உரித்தே’ - ந. 358 என்னும் சூத்திரப் பொருளையும் நோக்கிலர். அது நிற்க,

ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்,

முதலிய உத்தியையும் நோக்கிலர். அது நிற்க, ‘வரின்’ என்னும் எச்சம் பெரும்பான்மையும் கூடி நின்று சுட்டுப்பெயராம் என்று பொருள் தருதலையும் நோக்கிலர். அது நிற்க, ‘முதல்வரின் சுட்டே தனிவரின் சுட்டே’ எனப் பொருள்கோள் இலக்கணமும் நோக்கிலர். அது பற்றித் தமக்கு என ஒன்று இலரும் அதுவே. உரைப்பார் உரைப்பவைக்கெல்லாம் யாம் என் செய்வோம் என்க. சேற்று நிலத்தில் கவிழ்ந்த பால் தேன் நெய் முதலியனவும் சேறானாற்போல நன்னூல் சூத்திரமும் அவ்வுரையுடனே கலந்து குற்றப்பட்டது என்க.

‘முன்னூல் ஒழியப் பின்னூல் பலவினும்
நன்னூலார்தமக்கு எந்நூ லாரும்
இணையோ என்னும் துணிவே மன்னுக’
முன்னோர் ஒழியப் பின்னோர் பலரினும்’

என்றலும் ஒன்று.

‘செய் என் வினை வழி’                                             - ந. 138

‘செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்’                     - தொ.சொ.450

‘ழகர உகரம் நீடுஇடன் உடைத்தே’                              - தொ. எ. 261

‘கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை’.                                            - கு. 9

‘காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்’

இவை போல்வன எல்லாம் உபலக்கணம் என்க.