பக்கம் எண் :

110இலக்கணக் கொத்து 

3தாம்முன் அறிந்ததற்கு ஈதுமாறு ஆயின்
எந்நூல் விதியோ எனவே எண்ணுக

‘புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை’                                    - கு. 59

‘கடிக்கமலத் திருந்தயனுங் காணான்’

இவைகட்கு இலக்கணம் அமைப்போர் இறந்தகாலப் பெயரெச்சத் தகரஒற்றின்மேல் ஏறிநின்ற அகரம் திரிந்தது என்றும், கு-உருபிற்கும் கமலத்திற்கும் ககரஒற்றுத் திரிந்தது என்றும் அமைப்பர். இவற்றைச் சிற்றதிகாரங்களைக் குற்றமறக் கற்றவர், கெடுதலும் தோன்றலுமேயன்றிப் பொற்குடம் போலத் திரிந்தது அன்றே என்று கருதிப் பிழைபட்டது என்றே துணிவர். அன்றியும் சிலர், அகர உயிர் உகர உயிராய்த் திரிந்தது எனத் துணிவரேயன்றி, ‘யாம் அறிந்தவற்றுள் இல்லை எங்குள்ளதோ’ என்று கொள்ளமாட்டார். அதுபற்றி ‘எனவே எண்ணுக’ எனத் தேற்றம் கொடுத்தாம்.

[வி-ரை: ஒருவன் இந்நூலில் சுட்டப்படும் விதி தான் கற்ற நூற்களில் காணப்படும் விதிக்கு மாறாக இருப்பின், இவ்விதி வேறொரு நூற்கருத்தை உட்கொண்டு சொல்லப்பட்டது என எண்ணுதல் வேண்டும்.

புணர்ச்சி, இயல்பு எனவும் திரிபு எனவும் இருவகைப்படும்; திரிபுபுணர்ச்சி - மெய்பிறிதாதல், மிகுதல், குன்றல் என மூவகைப்படும். இது தொல்காப்பியம் குறிப்பிடும் செய்தி.

புணர்ச்சி - இயல்பு, விகாரம் என இருவகைப்படும்; விகாரப் புணர்ச்சி - தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும். இது நன்னூற்செய்தி.

ஆசிரியர் இருவரும் குறிப்பிட்ட செய்தி ஒன்றே; ஆனால் குறிப்பிடும் சொற்களிலேயே வேறுபாடுள்ளது. தொல்காப்பியர் திரிபு என்று குறிப்பிடுவதை நன்னூலார் விகாரம் என்று பெயரிடுகிறார். தொல்காப்பியர் மெய்பிறிதாதல் என்று குறிப்பிடுவதை நன்னூலார் திரிதல் என்கிறார்