பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 2185

செய் குன்று, செய்தக்க அல்ல, அறி கொன்று, இச்சொல் நன்று, வழுவற்றது, இவ்வயலுக்கு ஆயிரம் முடி நட்டான் - என்புழி, ஈரெச்சம் தொழிற்பெயர் பொருட்பெயர் முதலானவற்றிற்குப் பொது ஆதலின் முற்று அன்று.

[வி-ரை:

செய்குன்று-செய்த குன்று-பெயரெச்சம்.

செய்தக்க-செய்யத்தக்க-வினையெச்சம்.

அறிகொன்று-அறிதலைக் கொன்று-தொழிற் பெயர்.

சொல், முடி என்பன பொருட்பெயர்.

இவ்வாறு முதல்நிலைவினை பெயரெச்சம் முதலியனவாய் வருதல் காண்க.]

அன்றியும் நடந்தேன் நடந்தான் முதலிய வழுவற்ற சொற்க ளெல்லாம் இடவழுவாயே விடும்.

விதியும் மறையும் ஒரு சொற்கண்ணே உள்ளதே வினை. அக்குணம் இவற்றிற்கு இன்று. முதல்நிலை புடைபெயர்தலே வினையாதலின், எல்லா வினைச்சொற்களும் பிறத்தற்கு மூலமாகிய பொது முதல்நிலைத் தனிவினைப்பெயர் என்றே கொள்க.

எல்லா வினைச்சொற்களாவன - திணை பால் இடம் காலம் விதி மறை பொது சிறப்பு ஆதியோடு கூடின முற்று எச்சங்களும் தொழிற்பெயர்களும் என்க.

[வி-ரை: இவை ஆறும் மாறுதலின் - ஆறு என்றது முன்னிலை, ஏவல், ஒருமை, எதிர்காலம், வினை, முற்று என்பன. இவையல்லவாதல் தனித்தனியே எடுத்து மறுக்கப்பட்டது. பிரயோக விவேகம் 35ஆம் காரிகை உரையில் ‘‘முன்னிலை ஏவல் ஒருமைச் சொல்லாவது நடவாய் - வாராய் என்பன ஆய் என்னும் ஈறு - குன்றி நட - வா என முன்னிலை ஏவல் ஒருமைச் சொல்லாவதன்றி, நட - வா என்பன தாமே முன்னிலை ஏவல்