ஒருமைச்சொல் ஆகா என்க. அம்முன்னிலைச் சொற்கள் எல்லாம் ஏவல் வினையாயின், முன்னிலை விகுதி ஒழியத் தன்மை விகுதியோடும் படர்க்கை விகுதியோடும் கூடி, நடந்தேன் நடந்தான் என வருதல் இடவழு ஆதலின், பொருந்தா என்க.’’ ‘‘முதல்நிலை வினை முன்னிலை ஏவல் வினைமாத்திரையாய் நில்லாது வினையெச்சப் பொருட்டாயும், பெயரெச்சப்பொருட்டாயும், புடை பரந்து வினை தன்னைச் சொல்லும் பெயர்ப் பொருட்டாயும், முற்றுச் சொல்லாய் நின்றவிடத்து அம்முதல்நிலை பிரிந்து நின்று வினைதன்னைச் சொல்லும் பெயர்ப் பொருட்டாயும் நிற்கும்; இன்னும் முதல்நிலைத் தாது முற்றாய் முடிவனவும் உள’’ என்று விளக்கப்பட்டு எடுத்துக்காட்டுகளும் தரப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் இலக்கணக் கொத்துள் எடுத்தாளப்பட்டுள்ளன.] 2 தொடர்வினைப் பகுப்புக்கள் 67 | +தொடர்வினைக் குணமே தொகுக்குங் காலை முதல்நிலைத் தனிவினைப் பகுதி முன்னர் விகுதிமுதல் ஐந்தனுள் வேண்டுவ பொருந்தியும்1, அவையினுள் ஒன்றுஅணை யாதே திரிந்தும்2, திணையே பால்இடம் பொழுதுஇவை தீண்டித் தொழிற்பெயர் முற்றுஈ ரெச்சமாய்த் தோன்றிச் சிறப்புப் பொதுஎனச் சேறலும்3, அன்றியும் தன்வினை பிறவினை அவ்விரு வினைப்பொது4, விதிவினை மறைவினை இவைஇரு வினைப்பொது5, செய்வினை செயப்பாட் டு-வினை இப்பொது6, முதல்வினை சினைவினை இவைஇரு வினைப்பொது7, இருவகை எச்சத் தினுக்கும் பொதுவினை8, தெரிநிலை வினையே9 தெரியா நிலைவினை10 வினைக்குறிப்பு அன்றியும்11 வினாவினைக் குறிப்பு12 பொதுச்சிறப் பினுக்கே பொதுவாய் நிற்றல்13 வினைபெயர் தமக்கு வேறுஇன்று ஆதல்14 முற்றுஈ ரெச்சம் விதிமறை வினைபெயர் இயல்பா கியசொல் திரிபா கியசொல் ஒருமொழி பலமொழிக்கு ஒப்பாய் நிற்றல்15 ஆதியாப் பலவே ஆகும் என்ப.
| |
|