| வேற்றுமையில் - நூற்பா எண். 34, 35 | 167 |
கண்ணிற்குக் காணலாம் - நான்காவது; கண்ணிற் காணலாம் - ஐந்தாவது; கண்ணது காட்சி - ஆறாவது; - என முறையே காண்க. [வி-ரை: இவ்வெடுத்துக்காட்டுக்கள் கண்ணால் என்பதனை நிலைமொழியாகக் கொள்ளினும் அமையுமாறு நோக்கிக் கருவிக் கண் ஏனைய உருபுகள் வருமாறு உணரப்படும்.] 34 கொள்வோன்கண் பலஉருபு வருதல் 47 | +எல்லா உருபொடும் கொள்வோன் எழுமே. |
எ-டு: ‘இரப்பவர் என்பெறினும் கொள்வர்’ - -முதல்; ‘செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்’.-(கு. 167) -இரண்டாவது நாகரால் பலி - மூன்றாவது; நாகர்க்குப் பலி - நான்காவது; நாகரின் அன்பு செய்தான் - ஐந்தாவது; நாகரது பலி - ஆறாவது; நாகர்கண் அன்பு செய்தான் - ஏழாவது; - என முறையே வரும். [வி-ரை: இரப்பவர் நான்காவதற்குரிய கோடற்றொழிலை ஏற்றலானும், தவ்வைக்குக் காட்டிவிடும் என இரண்டாவது நான்காவதாதலானும், நாகர்க்குப் பலி என மூன்றாவதும் ஆறாவதும் நான்காவது ஆதலானும், நாகர்க்கு அன்பு செய்தான் என ஐந்தாவதும் ஏழாவதும் நான்காவது ஆதலானும் நான்காவதன் பொருட்கண் ஏனைய உருபுகளும் வருமாறு உணரப்படும்.] 35
+ நன்னூல் 317. முனிவர் உரை |