பக்கம் எண் :

168இலக்கணக் கொத்து 

நீக்கத்தின்கண் உருபு பல வருதல்

48+இரண்டுநான்கு ஐந்தொடும் எழுமே நீக்கம்.

எ-டு:

மதுரையை நீக்கினான் - இரண்டாவது;

மதுரைக்கு வடக்கு சிதம்பரம் - நான்காவது;

மதுரையின் வடக்கு சிதம்பரம் - ஐந்தாவது;

-என வரும்.

[வி-ரை: மதுரையின் நீங்கினான், மதுரையின் வடக்கு என இரண்டாவதும் நான்காவதும் ஐந்தாவது ஆதல் கொண்டு ஐந்தாவதன் பொருட்கண் ஏனைய இரு வேற்றுமையும் வருமாறு உணரப்படும்.] 36

குறையின்கண் பல உருபு வருதல்

49*நான்குஐந்து ஆறுஏ ழொடுகுறை நடக்கும்.

எ-டு:

சாத்தனுக்கு மகன் - நான்காவது;

மரத்தின் நீங்கின கொம்பு - ஐந்தாவது;

சாத்தனது கை - ஆறாவது;

உயிரின்கண் உணர்வு - ஏழாவது;

-என முறையே வரும்.

[வி-ரை: சாத்தனுடைய மகன், மரத்தினது நீங்கின கொம்பு, உயிரினது உணர்வு என ஆறாவது விரித்துநோக்கி ஆறாவதன் பொருட்கண் ஏனைய நான்கு ஐந்து ஏழு ஆம் வேற்றுமைகள வருமாறு காண்க.] 37


+ நன்னூல்317. முனிவர் உரை.

* நன்னூல்317. முனிவர் உரை.