| வினையியல் - நூற்பா எண். 3 | 191 |
‘மறந்திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்’ (கலி. 38) என்புழி, மறம் திருந்தார் என்ற தொடருக்கு நச்சினார்க்கினியர் மறத்தால் திருந்தியவர் என்று பொருள் கோடலின் வெகுளான் என்பதும் கோபிப்பான் என்ற பொருளில் வரும் என்று உணரப்படும். இனி, சுந்தரர் தேவாரத்தில், ‘நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண் டகம்செய்து வாழ்வேன் வேதியர்தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்குத்துணை ஆகேன்’ என்ற பாடல் தொடரில், வழுவேன் - வழுவை உடையேன்; வெகுளேன் - வெகுளியை உடையேன்; ஆகேன் - ஆகுவேன் என்ற சொல்லமைப்பைக் காண்க.] 6 | தொடர்வினை, செய்வினை செயப்பாட்டுவினை இப்பொது ஆகும்
|
உண்ட சாத்தன் - செய்வினை; உண்ட சோறு - (உண்ணப்பட்ட) செயப்பாட்டுவினை; புலிகொன்ற யானை; மீன் விழுங்கினவன்; ஒன்னார் வணங்கினான்; அவள் விரும்பினவன் இவன்; அறிந்து வந்தான்; - இவை சொல் ஒன்றே செய்வினையும் செயப்பாட்டு வினையும் ஆயின. [வி-ரை: புலியைக் கொன்ற யானை, மீனை விழுங்கினவன், பகைவரை வணங்கினான், அவளை விரும்பினவன் இவன், அறிந்து வந்தான் - என்று பொருள்படின் செய்வினையும், புலியால் கொல்லப்பட்ட யானை, மீனால் விழுங்கப்பட்டவன், பகைவரால் வணங்கப்பட்டவன், அவளால் விரும்பப்பட்டவன். இவன், அறியப்பட்டு வந்தான் - என்று பொருள்படின் செயப்பாட்டு வினையும் ஒரே தொடர்வினையால் அமைதல் உணரப்படும்.] |