பக்கம் எண் :

192இலக்கணக் கொத்து 

7தொடர்வினை,
முதல்வினை சினைவினை இவ்விரு வினைப்பொது ஆகும்

சாத்தன் நடந்தான் - (முதல்வினை)

கால் நடந்தது - (சினைவினை)

வனம் பொலிந்தது;

படை பொருதிற்று;

அவன் பருத்தான்;

அருக்கன் உருக்கினான்;

- இவைபோல்வன எல்லாம் முதல்வினையும் சினைவினையும் ஆயின.

[வி-ரை: பொலிதல் வனத்தின்தொழிலும், பொருதல் படையின் தொழிலும், பருத்தல் அவன் தொழிலும், உருக்குதல் அருக்கன் தொழிலும் ஆகும்போது முதல்வினை. பொலிதல் வனத்து மரங்களின் தொழிலும், பொருதல் படையின் வீரர்களின் தொழிலும், பருத்தல் அவன் உறுப்புக்களின் தொழிலும் உருக்குதல் சூரியனுடைய கிரணங்களின் தொழிலும் ஆகும்போது சினை வினையாம்.]

8தொடர்வினை,
இருவகை எச்சத்தினுக்கும் பொதுவினை ஆகும்

தேடிய பொருள் (தேடப்பட்ட - பெயரெச்சம்.)

தேடிய வந்தான் (தேடும்பொருட்டு - வினையெச்சம்)

ஓடிய புரவி (ஓடின - பெயரெச்சம்.)

ஓடிய இழிந்தான் (ஓடும் பொருட்டு - வினையெச்சம்.)

பாங்கனொடு கூடிய தலைவன் (கூடின - பெயரெச்சம்.)

தலைவியோடுகூடியவந்தான் (கூடும்பொருட்டு-வினைஎச்சம்) இவை சொல் ஒன்றே ஈரெச்சமாயின.