| வினையியல் - நூற்பா எண். 3 | 193 |
[வி-ரை: செய்த என்னும் பெயரெச்சமும், செய்யிய என்னும் வினையெச்சமும் கூடிய-ஓடிய-தேடிய முதலிய சொற்களில் ஒன்றுபோலக் காணப்படினும், பெயரெச்சத்தை அகர ஈறாகவும், வினையெச்சத்தை இய என்னும் ஈறாகவும் வேறு பிரித்துக்கொள்வர். ‘உரையிடத்து இயலும் உடனிலை அறிதல்’ (தொ.சொ. 458 நச்) என்ற நூற்பாவுரையுள் நச்சினார்க்கினியர் ஒரே வடிவினவாக வரும் இவ்வீரெச்சங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.] 9,10 | தொடர்வினை, தெரிநிலைவினையே தெரியாநிலைவினை ஆகும்
|
[வி-ரை: தெரிநிலைவினை - வெளிப்படையாகக் காலம் காட்டும் வினை. தெரியாநிலைவினை - வெளிப்படையாக அன்றிக் குறிப்பால் காலம் காட்டும்வினை. ‘வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது - நினையுங்காலைக் காலமொடு தோன்றும்,’ (தொ.சொ.198.) என்பது விதி ஆதலின், வினைச்சொல் வெளிப்படையாகவேனும் குறிப்பாகவேனும் காலம் காட்டியே நிற்றல் வேண்டும் என்பது.] தெரிநிலைவினை வெளி; வேறு, இல் இல்லை, இன்மை, உள், உண்மை, உண்டு, அல், அன்மை - இவை போல்வன தெரியாநிலைவினை. 11-13 | தொடர்வினை, வெினைக்குறிப்பு அன்றியும் வினாவினைக்குறிப்பு அன்றியும் பொதுச்சிறப் பினுக்கே பொதுவாய் நிற்றல் ஆகும்
|
குழையன், அன்று, இன்று - முற்று. நல்லசாத்தன், வல்லவீரன் - பெயரெச்சம். அன்றிவாரான், இன்றிச்செய்யான் - வினையெச்சம். இவை மூவகை வினைக்குறிப்பு. வடமொழி வழக்குப் பற்றியே சூத்திரம் செய்தனம். அது கருத்து அன்றாயின், தமிழ் மொழி வழக்குப் பற்றித்தெரியாநிலைவினையாகிய வினைக்குறிப்பு என்று கொண்டு, இருவகைக்கும் காட்டிய உதாரணங்களை ஓரிலக்கணமாக்குக. |