பக்கம் எண் :

198இலக்கணக் கொத்து 

எ-டு: முதல், ஈறு, ஒற்று, அழுக்காறு - இவைபோல்வன எல்லாம் முதல்நிலை.

முதலும். இறும், ஒற்றும், ‘கொடுப்பது அழுக்கறுப்பான்’                      - குறள் 166

-இவைபோல்வன எல்லாம் முற்று

முதலுதல், இறுதல், ஒற்றுதல், அழுக்கறுத்தல் - இவை போல்வன எல்லாம் தொழிற்பெயர்.

‘நாவலொடு பெயரிய பொலம்’                                     - முருகு. 18

‘ஐ எனப் பெயரிய வேற்றுமைக்கிளவி’                           - தொ.சொ. 71

‘அழகிய சொக்கர்’

‘முதலிய எழுத்து’

‘இற்ற பதம்’

ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர்’                                  -தொ.எ. 296

‘அழுக்கற்ற பாவி’

-இவைபோல்வன எல்லாம் பெயரெச்சம்.

அகரம் முதலிநிற்கும்;

னகரம் இற்று நிற்கும்;

மெய்கள் எல்லாம் ஒற்றி நடக்கும்

‘அழுக்கற்று அகன்றாரும் இல்லை’                                   -கு. 170

-இவைபோல்வன எல்லாம் வினையெச்சம்.

இங்ஙனம் ஐந்து வகையாய் வந்த வினையெல்லாம் பெயரடி யாகப் பிறந்த வினை.

நட, நடத்தல், நடந்தான், நடந்த சாத்தன், நடந்துவந்தான் - இவை ஐந்தும் வினையடியாகப் பிறந்த வினை.