| வினையியல் - நூற்பா எண். 3, 4 | 197 |
இம்மூன்று பொது. மேல் வருவன சிறப்பு.* [வி-ரை: செய்யும் என்னம் வாய்பாட்டின் பல நிலைகள்: அவன்வரும்....அவை வரும் - பொதுமுற்று; செய்யும் சாத்தன் - பெயரெச்சம்; அவன் இன்று செய்யும் - நிகழ்காலம்; அவன் நாளைச் செய்யும் - எதிர்காலம்; நீயிர் உண்ணும் - முன்னிலை உயர்திணைப் பன்மைச் சிறப்பு முற்று. தோழியும் கலுழ்ம் - கலுழும் என்ற சொல்லில் ஈற்றயல் உயிர் கெட்டது. பொருள்கள் ஆம் - ஆகும் என்ற சொல்லில் ஈற்றயல் உயிர் மெய் கெட்டது. மிசைப்பாயுந்து மிழலை - பாயும் என்பது பாயுந்து என உம் உந்து ஆயிற்று. முன்னிலைப்பன்மையில் வரும் உம் ஈற்றுச்சொல் செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றன்று என்பதே நச்சினார்க்கினியர் கருத்து. (தொ.சொ.226. நச்.) உண்டு என்பதுபற்றி 85ஆம் நூற்பா உரையில் காண்க. இந்த 65, 66, 67 ஆம் நூற்பாக்கள் பிறன்கோள் கூறும் பொதுச்செய்தி; இவ்வாசிரியர்தம் கருத்து என்று கோடல் கூடாது, இனிச் சிறப்புச் செய்திகள் கூறப்படும்] 3 வினையடிகள் 68 | பெயர்வினை இடைஉரி நான்குஅடி யானும் பிறக்கும் வினைஎனப் பேசுவர் புலவர்; பண்புஅடி முதலாப் பலவும் பகர்வர்; அவைஇவை யுள்ளே அடங்கும் என்க.
|
* நன்னூல் 322. முனிவர் பெரும்பாலும் இந்நூற்பா உரைப் பகுதியை எடுத்து மொழிந்துள்ளார். |