| வினையியல் - நூற்பா எண். 16, 17 | 217 |
‘உலகநூல் உணர்ந்தோர்க்கு உரைப்பினும் தெரியா பேரறி வோர்வினை எனவே பேசுக; அறிவுநூல் உணர்ந்தோர்க்கு அறையினும் தெரியா சிற்றறி வோர்வினை எனச்செப் புகவே; அவ்விரு நூலை அறிந்தார் தமக்கே இவ்விரு கூற்றுஎண் வினைவிளங் கிடுமே’. அஃது என்னெனின், இழிபு வினைகள் எல்லாவற்றினுள்ளும் மிக இழிபு - வினையாவது இரத்தலே என்னும் உலக நூல்; உயர்ந்த வினைகள் எல்லாவற்றினுள்ளும் மிகவும் உயர்ந்த வினையாவது இரத்தலே என்னும் அறிவு நூல். ‘ஒன்று இல்லாதான் செத்த பிணத்திற் கடை’ ‘இயல்பாகும் நோன்பிற்கு ஒன்று இன்மை’ - கு. 344 என்பனவும் அது. இங்ஙனம் எல்லா வினையையும் மாறுபடக் கூறலே அன்றி ஒரு வினையையானாலும் உடன்பட்டு கூறாது ஆதலால், யாதானும் ஒரு வினைச்சொல் பிறந்துழி, அவ்வெட்டனுள் இது என்று துணிந்து அடக்குதல் அவர்க்கேயன்றி ஏனை இருவர்க்குங் கூடாதாதலால் என்க. 16 வினைவகை விளக்கம் 81 | அவைதாம், மனம்மொழி மெய்அறிவு ஆகிய நான்கன் அசைவே ஆகியும் அவ்வசைவு இன்றியும்1 நல்வினை தீவினை வெறுவினை எனநடந்து2 அறிந்து செய்வினை அறியாது செய்வினை அசேதனம் செய்வினை எனவே அமர்ந்து3 தீவினை நல்வினை சிலமுறை திறம்பிச்4 செய்யா வினையே செய்வினை ஆகிச்5 செய்இரு வினையே செய்யா வினையாய்6 இன்னும் பலவாம் இலக்கணம் பெறுமே. | |
|