பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 19231

உண்பான் வந்தான்.

ஓதுவான் போயினான்.

- இவை வினைமுற்றுப் பெயர் வினையெச்சமானது.

[வி-ரை: வினைமுற்றுப்பெயர் ஈரெச்சமாதல் பிரயோக விவேக நூலார்க்கு உடன்பாடன்று போலும்.]

5வினைமுற்றுப்பெயர் ஈறுஇகர மாதல்

எ-டு:

இவன் மானேந்தி.

இவன் பிறைசூடி,

இவன் கங்கையாடி.

- இவை ஏந்தினான், சூடினான், ஆடினான் என்னும் வினைமுற்றுப் பெயர் ஈறுஇகரமானது.

[வி-ரை: ‘‘மானேந்தி, பிறைசூடி, அம்பலத்தாடி, குடக் கூத்தாடி, நூலோதி, சடாதாரி, வேடதாரி, சோமயாசி - இவை உயர்திணைக்கண் இகரம் சேர்ந்து இறுதலாகிய வினைமுற்றுப் பெயர். சேர்ந்தாரைக் கொல்லி, நூற்றுவரைக் கொல்லி, ஞாயிறுகாணி - இவை அஃறிணைக்கண் இகரம் சேர்ந்து இறுதலாகிய வினைமுற்றுப் பெயர்’’ பிரயோகவிவேகம் 37 உரை.]

6அவ்வீறு இகர மாயவை,
வினைமுதல் செயப்படு பொருளொடு கருவி
இடம்வினை யெச்சமாய் இயங்குதல்,

எ-டு:

மண்ணுணி வெண்ணெய் உண்டான்.

புழுதிஉணி கடித்தது.

ஞாயிறுகாணி எரித்தது.

- இவை வினைமுதல்.