ஊருணி, பேயாடி. - இவை செயப்படுபொருள்- இவ்விளக்குக் கண்காட்டி. இத்தகடு பேயோட்டி. இச்சகடு தேரோட்டி. - இவை கருவி, இப்பானை நாழி பொங்கி. இம்மரக்கால் குறுணி கொள்ளி - இவை இடம் அம்பலத்தாடி வந்தான். மயிலேறி நீங்கினான். வேலேந்தி வெகுண்டான். நூலோதி நுவன்றான். - இவை வினையெச்சம். இவை ஈறுஇகரமாயவை வினைமுதல் ஆதியாக முறையே காண்க. [வி-ரை: புழுதிஉணி - ஒருவிடப் பூச்சி; ஞாயிறுகாணி - சூரியகாந்தக்கல். மண்ணுணி - திருமால். ஊருணி - ஊராரால் உண்ணப்படுவது. பேயாடி - பேயால் ஆட்டப்படுபவன், ‘‘மண்ணுணி, ஊருணி இவை முறையே கருத்தாவினும் கருமத்தினும் இகரம் சேர்ந்து இறும் வினைமுற்றுப்பெயர்’’. பி. வி. 37 உரை] வினைமுற்றுப் பெயர் இன்னும் பலவாம்என விளம்புவரே |
‘இன்னும் பல’ என்றதனால், ‘தாம் வீழ்வார்’ (கு. 1103) - தம்மால் வீழ்ப்படுவார்; ‘யாம் வீழ்வார், - எம்மால் விரும்பப்படுவார்; |