| வினையியல் - நூற்பா எண். 19, 20 | 233 |
‘இல்வாழ்வான் என்பான்’ (கு. 41) - எனப்படுவான். ‘உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம் (நல்வழி 29) -உண்ணப்படுவது, உடுக்கப்படுவது; - என உருபும் படுசொல்லும் தொக்கு வினைமுற்றுப்பெயராய் வினைமுதலாயும், படுசொல் தொக்குச் செயப்படுபொருளாயும் வருதல் முதலாயின எல்லாம் கொள்க. [வி-ரை: ‘‘தாம் வீழ்வார் மென்தோள்’, ‘இல்வாழ்வான் என்பான்’, ‘உடுப்பதூஉம் உண்பதூஉம்’ என்னும் கருமமாய் நின்ற வினைமுற்றுப்பெயர் செயப்பாட்டு வினையோடு தோன்றாதும், பொருள் உரைக்குங்கால் தம்மால் வீழப்படுவார், இல்வாழ்வான் எனப்படுவான், உடுக்கப்படுவது, உண்ணப்படுவது எனச் செயப்பாட்டு வினையோடு தோன்றும்’’ பி. வி. 37 உரை] 19 எச்சம் பற்றிய கருத்துக்கள் 84 | எச்சம்என்று ஒன்றுஇல்லை இடைஅடை என்றும்1 வேறுஎச்சம் என்றுஇலை விகாரமுற்று என்றும்2 எச்சம்ஒன்று என்றும்3 இரண்டே என்றும்4 தன்வினை பிறவினை இவ்விரண்டு என்றும்5 முப்பொழுது அறிதலான் மூன்றே என்றும்6 தலைமைஇல் தலைமை எனஇரண்டு என்றும்7 காரணம் காரியம் எனஇரண்டு என்றும்8 முதல்வினை சினைவினை எனஇரண்டு என்றும்9 இயல்பு திரிபு இரண்டே என்றும்10 விரியே தொகையே எனஇரண்டு என்றும்11 வினையெச்சம் ஒன்றையே வெவ்வேறு என்றும்12 ஈறுசொல் பற்றி இரண்டே என்றும்13. இன்னும் பலபல இலக்கண மாகச் சொன்னார் சிலரே துணியார் பலரே. | |
இஃது எச்சம் என்பது ஒன்றனையே ஓரொருவர் ஓரோர் இலக்கணமாகக் கொண்டது கூறுகின்றது. |