பக்கம் எண் :

234இலக்கணக் கொத்து 

1எச்சம் என்று ஒன்றுஇலை; இவைஅடை

அட்ட சோறு, சொன்ன மொழி;

உண்டு பசி தீர்ந்தான், உறங்கி விழித்தான்;

இவை அடையாய் நிற்றலேயன்றி, வேறு பயன்படும் பொருள் இன்று ஆகலான் ‘எச்சம்’ என்று ஒன்றுஇலை; அடைமொழியே’ என்பர்.

2வேறுஎச்சம் என்றுஇலை; விகாரமுற்று

உண்டான் சாத்தன், உழுதான் வந்தான் என்பன விகாரப்பட்டு உண்ட சாத்தன், உழுது வந்தான் என நிற்றலால், ‘எச்சம் என்று ஒன்று இல்லை; விகாரமுற்றே’ என்பர்.

3எச்சம் ஒன்று

உண்ட, உண்டு, என்பன குறைவினையாதலால், எச்சம் என்பது ஒன்றே என்பர்.

4எச்சம் இரண்டே

எச்சம் நிலைமொழிக் குறைவினையாய் ஒன்றே ஆயினும் வருமொழி நோக்கி இரண்டே என்பர்.

5தன்வினை பிறவினை இவ்விரண்டு

[வி-ரை:

செய்த, செய்து - தன்வினை;

செய்வித்த, செய்வித்து - பிறவினை.]

6முப்பொழுது அறிதலான் மூன்றே

[வி-ரை:

உண்ட, உண்டு - இறந்தகால எச்சம்.

உண்கின்ற, உண - நிகழ்கால எச்சம்.

உண்ணும் உண்ணிய - எதிர்கால எச்சம்.]