பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 20235

7தலைமை இல்தலைமை என இரண்டு

தச்சன் செய்த தேர்,
உழுது பயன்கொண்டான் வறியன் - தலைமை.
அரசன் செய்த தேர்,
உழுது பயன்கொண்டான் வேந்தன் - இல்தலைமை.

இங்ஙனம் வருதல்பற்றித் தலைமை, இற்றலைமை (நேரிடையாக அமையாத தலைமை) என இரண்டே என்பர்.

8காரணம் காரியம் எனஇரண்டு

மழை பெய்த நீர்,

புல்லின இன்பம் - காரணம்.

சமைத்த அரிசி,

உண்ட சோறு - காரியம். இவை பெயரெச்சம்.

உழுது விளைந்த நெல் - காரணம்.

பிணிதீரக்குடித்தான் மருந்து - காரியம்; இவை வினையெச்சம் இங்ஙனம் வருதல் பற்றிக் காரணம், காரியம் இரண்டே என்பர்.

9முதல்வினை சினைவினை எனஇரண்டு

[வி-ரை:

சாத்தன் நொந்து கிடந்தான் - முதல்வினை.

சாத்தன் கண் நொந்து கிடந்தான் - சினைவினை.]

10இயல்பு திரிபு எனஇரண்டே

மருவின நாள் - மரீ இய நாள்.

தழுவிக் கொண்டான் - தழீஇக் கொண்டான்.

என வருதல் பற்றி இயல்பு, திரிபு என இரண்டே என்பர்.

11விரியே தொகையே எனஇரண்டு

பொருத தகர் - பொருதகர் (குறள். 486)

வரிந்து புனைபந்து - வரிப்புனைபந்து (முருகு. 68)

என வருதல் பற்றி விரி தொகை என இரண்டே என்பர்.