பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 20, 21237

‘இன்னும் பலபல’ என்றதனால் செயற்கு என்பதனை வினையெச்சம் என்றும், உருபு என்றும். நீர் பொய் கூறியபின் மெய் கூறுவார் யார்’ என்பதனைக் கூறினால் என்று ஒரு சொல்லாக்கி வினையெச்சம் என்றும், இரு சொல்லாக்கிப் பெயர் கொண்ட பெயரெச்சம் என்றும் கூறுதல் முதலாகப் பல கூறுவர் என்றும் கொள்க. 20

‘இவற்றுள் ஒன்றனைத் தள்ளி ஒன்றனைக் கொள்ளற்க; இவை எல்லாவற்றையும் கொள்க’ என்னும் பொருள்படச் ‘சிலர் பலர்’ என்றாம்.

பொது வினைகள்

85வேறுஇல்லை உண்டுயார் வேண்டும் தகும்படும்
வினைபெயர் எச்சம் வியங்கோள் பத்தும்
திணைபால் இடம்எலாம் செல்லும் என்ப.

யார் என்னும் வினாவினை உயர்திணைப் படர்க்கைக்கு மாத்திரம் உரித்தன்றோ எனின்,

‘நானார் என்உள்ளம்ஆர் ஞானங்கள்ஆர்
என்னைஆர் அறிவார்’                                - திருவா. கோத்தும் 2

என்றும்,

‘ஊதைகூட் டுண்ணும் உகுபனி யாமத்தெம்
கோதைகூட் டுண்ணிய தான்யார்பன் - போதெலாம்
தாதொடு தாழுந்தார்க் கச்சி வளநாடன்
தூதொடு வாராத வண்டு’

என்றும்,

இக்காரியம் செய்தற்கு நீ யார் என்றும், அஃறிணை இருபாற் கண்ணும், ஏனை ஈரிடத்தினும் வருதலின், எல்லாவற்றிற்கும் உரித்து என்க.

வேண்டும் முதல் மூன்றும் மூற்றிற்கும் எச்சத்திற்கும் பொதுவாய் செய்யும் என்னும் வாய்பாடு அன்றோ எனின்,