பக்கம் எண் :

276இலக்கணக் கொத்து 

‘தத்-அபாவம் தத்-அந்நியம் தத்-விருத்தம்
என மூன்று ஆகும் நஞ்ஞு தற்புருடன்.’

இஃது உரைச்சூத்திரம்.

இனி, பாணினி பகவான் இவ்வுதாரணங்கட்கு முன் நின்ற நகாரம் கெட்டு வெறொரு நகாரம் வந்தது என்பர்.

தமிழினும், ‘இல்பொருள் உவமை’ - இது இயற்கையான தத்-அபாவத்தில் வந்து நஞ்ஞு.

‘வேற்றுமை அல்வழி’                                         - தொ. எ. 158

‘அஃறிணை’                                                 - தொ. சொ. 1

என்பன தத்-அந்நியமான இனத்தில் வந்த நஞ்ஞு.

‘பயனில்சொல் பாராட்டல்’                                         - கு. 196

‘கோளில் பொறி’                                                  - கு. 9

இவை உண்மைக்கு எதிர்மறையான தத்-விருத்தத்தில் வந்த நஞ்ஞு.

‘கருமம் அல்லாச் சார்பு என் கிளவி்’                          - தொ. சொ. 84

இஃது இன்மைப் பொருளில் வந்த அன்மை.

‘மன்னாப் பொருளும் அன்ன இயற்றே’                           தொ. சொ. 34

‘பிறவாழி நீந்தல் அரிது’                                            - கு. 8

‘புறத்த புகழும் இல’                                               - கு. 39

என்புழி முறையே தத்-அபாவமும், தத்-அந்நியமும், தத்-விருத்தமுமான நஞ்ஞு இனி, இல்பொருள், இல்லாப் பொருள், ‘இரப்பாரை இல்லாத ஈர்ங்கண்மா ஞாலம்’ (கு. 1058) ‘ஏமாப்பில் தோணி’ (கு. 1068) என அடையடுத்துத் தொகை மொழியாய் நிற்கும் என்க’’ பிரயோக விவேகம் 21உரை.] 15