| ஒழிபியல் - நூற்பா எண். 16 | 277 |
எழுத்தாற்றல் முதலியன 102 | எழுத்து சொல்பொருள் ஆற்றல் மொழிப்பொருட் காரணம் இவற்றுள் கருதுவ கருதுக.
|
என்பது எழுத்தாற்றல், சொல்லாற்றல், பொருளாற்றல், மொழிப் பொருட் காரணம் என்னும் நான்கனுள் கருதுதற்கு அகப்பட்டனவற்றை மாத்திரை கருதுக என்றவாறு. அயன் - அரி - அரன் என்புழி, அகர உயிரானது ஒற்று உயிர்மெய் முதலியவற்றை உணர்த்தாது, தான் உயிரே, தனக்கு ஒரு மாத்திரையே என்று உணர்த்தலே எழுத்தாற்றல். இக்குளத்தைப் பெருக்கு, இவ்வாற்றுப்பெருக்கு நேற்று வந்தது, இவ்வாற்றுப்பெருக்குக் கடல் போன்றது - என முறையே குகர உயிர்மெய்யானது ஒன்று அரை கால் மாத்திரையாகியும், முற்றுகரம் குற்றுகரம் ஒற்றாகியும், அலகு பெற்றே நின்றும். பெறுதற்கும் பெறாமைக்கும் பொதுவாயே நின்றும், பெறாதே நின்றும் ஆற்றல் கெட்டது. [வி-ரை: ‘குற்றிய லுகரத்து இறுதி உளப்பட முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே’ - தொ. எ. 152 என்பது விதியாதலின், பெருக்கு என்ற முன்னிலை வினை முற்றியலுகர ஈற்றதாயிற்று. ‘வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே’ - தொ. எ. 409 ‘இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே கடப்பாடு அறிந்த புணரிய லான’ தொ. எ. 37 என்பனவற்றான் ‘கவ்விடைக் குற்றுகரம் காதல் இனமென்று கல்வினைத் தான் சேர்ந்து கரைந்து’ கால்மாத்திரையது ஆகி ஒற்றுநிலையில் நின்று அலகுபெறாதாயிற்று. இங்ஙனம் கால் மாத்திரையாதல் ‘கு’ ஒன்றற்கே கொள்க.] |