| ஒழிபியல் - நூற்பா எண். 27 | 293 |
‘உயர் திணை மேன’ - தொ. சொ. 57 ‘அஃறிணை மேன’ ‘உரிச்சொல்மேன’ - தொ. சொ. 298 கண்ணகன் பரப்பு’ அகநா. 176 ‘வாளான் வெட்டினான்’ இவை லகரம் னகரமாய்த் திரிந்தது. மலையில் வீழ்அருளி, மழை பெய்யில் வாழலாம் - இவை னகரம் லகரமாய்த் திரிந்தது. ‘சுழியோடு எறிபுனல் பொன்னி நாடன்’ - இது குற்றெழுத்து நெட்டெழுத்தாய்த் திரிந்தது. மாகி - மாசி - இது ககரம் சகரமாய்த் திரிந்தது. இவை திரிதல். [மாகமாதம் மாகி என்றாகிப் பின் மாசியாயிற்று] யாவர் - யார்; யானை - ஆனை; யாடு - ஆடு;-இவை கெடுதல் தசை - சதை, வைசாகி - வைகாசி, நாளிகேரம் - நாரிகேளம் ‘காமவிதி கண்முகம் மருங்குல்வாய் துகடினி’ - காவிமதி, துடிகனி - இவை நிலைமாறுதல். [விசாகமாதம் வைசாகி என்றாகிப் பின் வைகாசியாயிற்று] புணர்ச்சி விகாரத்திற்கும் புணர்ச்சியில் விகாரத்திற்கும் வேறுபாடு என் எனின், முன்னது வருமொழி நாற்கணம் நோக்கியாவது, வேற்றுமை அல்வழி நோக்கியாவது அடி தொடை ஓசை மூன்றும் நோக்கியாவது, இன்னும் யாதானும் ஒரு காரணத்தால் விகாரப்படும் என்க. பின்னது ஒரு காரணமும் இன்றியே விகாரப்படும் என்க. |