பக்கம் எண் :

292இலக்கணக் கொத்து 

எழுத்து விகாரவகை

111புணர்ச்சி விகாரம் புணர்ச்சிஇல் விகாரம்
எனஇரண்டு ஆகும் எழுத்து விகாரம்.

புணர்ச்சி விகாரம் தொடர்மொழிக்கண்ணும், புணர்ச்சியில் விகாரம் தனிமொழிக்கண்ணும் வரும் என்க.

இது பொது; வருவன சிறப்பு. 25

புணர்ச்சி விகாரவகை

112எழுத்திலக் கணத்தின் எழுந்த விகாரம்,
யாப்பிலக் கணத்தின் எழுந்த விகாரம்
எனஇரு கூறாம் புணர்ச்சி விகாரம்.

இவ்விருவகை விகாரமும், ஈரிலக்கணத்திலும் எல்லாரும் விரித்தலின், யாம் விரித்திலம் என்க.

[வி-ரை: ஈரிலக்கணம் எழுத்தும், யாப்பும்] 26

புணர்ச்சியில் விகாரம்

113தோன்றல் திரிதல் கெடுதல்நிலை மாறுதல்
எனநான்கு ஆகும் புணர்ச்சியில் விகாரம்.

நிலைமாறுதலாவது - எழுத்துக்கள் ஒன்றன் நிலைக்களத்து ஒன்றுசென்று தம்முள் வேறின்றி நிலைமாறுதல்.

எ-டு:

செல் - சென்றீ; நில் - நின்றீ; யாத - யாவது; இவை தோன்றல்.