பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 23, 24291

‘பாடினான் தேவகீதம் பண்ணினுக்கு அரசன்’                      - சீவக. 2061

‘குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி’                      - திவ். பிர. 2986

அடுஞ் செந்நெற்சோறு.

‘உப்பின்று புற்கை உண்க’

‘அளமரு குயிலினம் அழுங்கிப் பூம்பொழில்
உளமெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே’                           - சீவக. 49

-இவை சிறுபான்மை பொருந்துவன.

‘காமனை எரித்த கணபதி தந்தை
வாம தேவன் அடியிணை பணிவாம்’

என்றால் காமனை எரித்தல் கணபதிக்க இன்மையின் இது பொருந்தாது.

‘காமனை எரித்த வாம தேவன்
கணபதி தந்தை மலரடி பணிவாம் ’

இது பொருந்தும் ... ... ... இவை எல்லாம் அண்மைநிலை அல்லது பெறாமை காண்க.’’ - பி. வி. 19 உரை.

ஒருகால் பொருந்தும் என்றது - இடை நின்ற சொற்களோடு தொடராது, முடிக்குஞ் சொல்லோடு பொருள் இயையுமிடத்துப் பொருந்தும் என்பது.] 23

வழுவுடைப் புணர்ச்சி

110வழுவுடைப் புணர்ச்சியைப் பலர்விரித் தலின்இலம்.

எழுத்தினுள் விலக்கியனவும், சொல்லினுள் திணைவழு முதலியனவும் என்க.

[வி-ரை: இவற்றைத் தொல்காப்பியம் முதலிய நூல்கள் விரித்துக் கூறியுள்ளன.] 24