இதனுட் பெரும்பான்மையும் இவ்வாசிரியர் கொண்டுள்ளார். எண்ணுப்பெயர் அன்சாரியை பெறுதல், ‘எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்’ - தொ. எ. 198 என்பதனால் கொள்க.] 22 இருவகையும் ஒருங்கியல் புணர்ச்சி 109 | இவ்விரு வகையும் ஒருங்கியல் புணர்ச்சி சிலஇடைப் பிறவரல் எனத் தெளிந்தனரே. |
எ-டு: வாளான் மருவாரை மாய வெட்டினான். அறத்தை அழகுபெறச் செய்தான். ‘நீலமயில் ஏறிவரும் ஈசன்அருள் ஞாமைதலை’- இவைபோல்வன எல்லாம் ஒருகால் பொருந்தும்; ஒரு கால் பொருந்தா என்க பொருத்தப்புணர்ச்சி ஒன்றிருக்கவே ஏனை இரண்டும் கொண்டது என் எனின், புணர்ச்சிச்சிறப்பினும் அடிதொடை ஒசை முதலிய செய்யுளுறுப்புச் சிறத்தலின் கொண்டது என்று தெளிக. சிறுபான்மை சொல் சுருங்குதல் பொருட்டு என்றும், சொல் விரிதல் பொருட்டு என்றும் தெளிக. இம் மூவகைப்புணர்ச்சியும் சிறப்பும், அச்சிறப்பின்மையும், பொதுவும் ஆகிய வழுவற்ற புணர்ச்சியேயாம் என்க; ‘சோறுகடல் முழங்கிற்று உண்டான்’ என்பதுபோலச் சிறவாத வழுப்புணர்ச்சியன்று; புணர்ச்சி நான்காயிற்று என்க. [வி-ரை: ‘‘இடைப்பிறவரலுள் சிறுபான்மை பொருந்துவனவும் முழுதும் பொருந்தாதனவும் உள. எ-டு: அறத்தை அழகுபெறச் செய்தான் வாளான் மருவாரை மாய வெட்டினான். |