பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 22289

சார்ந்த சொல்லாவது - இடைப்பிறவரல் சூத்திரத்து உதாரணங்களாம்.

இனி, தூரான்வயத்துள் பதத்தோடு பதம் பிரித்துக் கூட்டலன்றி, விகுதியைப் பிரித்தும், உம்மையைப் பிரித்தும், விபத்தியைப் பிரித்தும், பண்பைப் பிரித்தும் கூட்டுவர்.

எ-டு:

‘பொறிநுதல் வெயர்த்தல்’                                  - தொ, பொ. 261

‘அறம் சொல்லும் நெஞ்சத்தான்’                                   - கு. 185

‘அருங்கேடன்’                                                  - கு. 210

‘அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்(து)
இன்புற்றார் எய்தும் சிறப்பு’                                       - கு. 75

செய்த வேள்வியர்,

‘பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்தோங்கு உயர்கொடிச் சேவ லோயே’                  - பரிபாடல் 3: 17,8

இவற்றுள், வெயர்ப்பொறித்த நுதலாதல் - நெஞ்சோடு அறம் சொல்வான் - கேடு அரியன் - அன்புற்றார் - வேள்வி செய்தவர் - கொடியோர் என விகுதி பிரித்தல் வரும்.

'புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே’                     - தொ. எ. 35

இதனுள் நிலையிடையும் குறுகல் உரித்தே எனவும்,

‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய்கவர்ந் தற்று’                                   - கு. 100

இதனுள் இனிய கனி, இன்னாத காய் எனவும்,

‘மீகண் - கீழ்நீர் - ‘செல்வத்துள் எல்லாம் தலை’                    - கு. 411

இவற்றுள் கண்மீ - நீர்க்கீழ் - எல்லாவற்றுள்ளும் தலை எனவும்,

‘நடுவூருள் நச்சுமரம்’                                            - கு. 1008

இதனுள் ஊர் நடுவுள் எனவும் முறையே உம்மையும் பண்பும் உருபும் பிரித்தல் வரும். அநுஷங்கம் என்னும் அதிகாரத்தால் பிரித்தலும் கொள்க’. - பி. வி. 19 உரை