இங்கு, அராக தத்துவம் ஆசைதனைப் பெருக்குவிக்கும்; நியதி தத்துவம் நிச்சயித்து நிறுத்தும்; இறைசக்தி எல்லை, பலம் புதுமை உறுவிக்கும் - என்ற தனித்தனித் தொடர்கள்மூன்று இச் சிவப்பிரகாசப் பாடலில் கூறப்பட்டமை பல தொடருக்கு எடுத்துக்காட்டாம்] 38 எழுத்துச் சொற்பொருட் டிரிபு 125 | எழுத்துச் சொல்திரிபு இரண்டே அன்றிப் பொருள்திரிபு எங்கும் பொருந்தும் என்ப.
|
எ-டு: பொன் குடம் - பொற்குடம்; மாகி - மாசி; தீயேன் - தியேன்; ஆறுமுகம் - அறுமுகம் எனவும், உடுத்து-உடீஇ; வெல்க-வென்றீக; எல்லாப்பொருளும்-எப்பொருளும்; கழுவாத கால் - கழாஅக்கால்; பரிய அரை - பராரை; மராவத்து - மராத்து;தெரிவான் - தெரிகிற்பான்; காண்பான் - காண்கிற்பான் எனவும் வரும். இவை போல்வனஎல்லாம் எழுத்துத்திரிபும் சொல் திரிபும் என்க. இனி, பொருள்திரிபு வருமாறு: ‘பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மை’ - கு. 907 இது ஒழுகுவான் என்னும் முற்றினது பொருள் தன்நிலை திரிந்து பெயரெச்சத்தின்கண்ணே சென்றது. ‘நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து' - கு. 1128 இது அஞ்சுவன் என்னும் ஒருமை முற்றினது பொருள் அவ்வாறு திரிந்து பன்மை முற்றின்கண்ணே சென்றது. ‘தானும் தேரும் பாகனும் வந்து என் நலன் உண்டான்’ -இது பன்மை முற்றினது பொருள் ஒருமை முற்றின்கண்ணே சென்றது. |