| ஒழிபியல் - நூற்பா எண். 39 | 335 |
‘ஞாயிறு பட்டு வந்தான்’ - செய எண் எச்சத்தினது பொருள் செய்து என் எச்சத்தின்கண்ணே சென்றது காண்க. இருதிரிபு முற்கூறினாம் ஆதலின் அன்றி’ என்றாம். ‘எங்கும்’ என்றது எல்லாச் சொல்லினும் என்க. இனி, சொல்திரிபே அன்றிப் பொருள்திரிபு இல்லை என்பாரும், பொருள்திரிபே அன்றிச் சொல்திரிபு இல்லை என்பாரும், இவ்விரண்டும் உண்டு என்று கொண்டிருக்கவும் மயங்கிச் ‘சொல்திரியினும் பொருள் திரியா வினைக்குறை’ (ந. 346) என மாறிக்கூறுவாரும். எழுத்துத்துதிரிபாவது சார்பெழுத்தே என்பாரும், சொல் திரிபாவது கிளி என்பது கிள்ளை, மயில் என்பது மஞ்ஞை என்பது போல்வன என்பாரும், பொருள் திரிபாவது மாவினது வெண்பூப் பசுங்காய் ஆயிற்று - களாவினது பசுங்காய் கருங்கனி ஆயிற்று - மயிரினது கருமை வெண்மை யாயிற்று - பாலினது இனிமை புளிப்பாயிற்று என்பாரும் உளர். அவர் மத மறுப்புக்களை விரிக்கின் பெருகும். 39 தொடர்மொழி இயல்பு 126 | பலபொருட்கு ஒருவடிவு ஆகும் பதங்களை ஓசையொடு கூறுவர் உயர்ந்தோர்; அவைதாம், தனிமொழி தொடர்மொழி எனும்இரண் டினும் வரும்; தனிமொழி வினைமொழி தனையே சாரும்; சொல்வேறு படாஅது பொருள்வேறு படுதலும், பொருள்வேறு படாஅது சொல்வேறு படுதலும், பொருள்சொல் ஒருங்கே போய்வேறு படுதலும் எனமூன்று என்பர் தொடர்மொழி இயல்பே
| |
எ-டு: நட, வா முதலிய முதல்நிலைத் தனிவினைகளை முற்றாக்க வேண்டில் எடுத்துச் சொல்லுக; முதல்நிலைத் தொழிற்பெயர் ஆக்கவேண்டில் படுத்துச் சொல்லுக. |